மாவட்ட செய்திகள்

மொபட் மீது ஜீப் மோதல்: முதியவர் பலி; 2 பேரன்கள் படுகாயம் + "||" + Jeep Confrontation on Mobit: The Elder Kills 2 grandsons were injured

மொபட் மீது ஜீப் மோதல்: முதியவர் பலி; 2 பேரன்கள் படுகாயம்

மொபட் மீது ஜீப் மோதல்: முதியவர் பலி; 2 பேரன்கள் படுகாயம்
தேனி அருகே மொபட் மீது ஜீப் மோதியதில் முதியவர் பலியானார். அவருடைய 2 பேரன்களும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தேனி, 


தேனி அருகே உள்ள அரண்மனைப்புதூரைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 70). விவசாயி. நேற்று மாலை இவர் தனது பேரன்கள் ஆகாஸ்வரன் (9), சர்வேஸ்வரன் (14) ஆகியோரை அழைத்துக் கொண்டு அருகிலுள்ள தனது தோட்டத்துக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.

அரண்மனைப்புதூர் கொடுவிலார்பட்டி சாலையில் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது வருசநாட்டில் இருந்து தேனி நோக்கி வந்த ஜீப், மொபட் மீது மோதியது. இதில் மொபட்டில் சென்ற 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.

தகவலறிந்த பழனிசெட்டிபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார் விரைந்து சென்று படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக் காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் செல்லும் வழியிலேயே முத்துப்பாண்டி பரிதாபமாக இறந்தார்.

படுகாயம் அடைந்த சிறுவர்கள் 2 பேருக்கும் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. திருவொற்றியூர் அருகே லாரி மோதி முதியவர் பலி; குழந்தை படுகாயம் பொதுமக்கள் சாலை மறியல்
திருவொற்றியூர் அருகே தறிகெட்டு ஓடிய கன்டெய்னர் லாரி மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் முதியவர் பரிதாபமாக இறந்தார். குழந்தை படுகாயம் அடைந்தது. இதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
2. தூசி அருகே கார் மோதி முதியவர் பலி
தூசி அருகே கார் மோதி முதியவர் பலியானார்.