மாவட்ட செய்திகள்

குழந்தைகளுடன் பெண் இறந்த வழக்கில் கணவர் உள்பட 3 பேர் கைது + "||" + Three persons, including husband, were arrested in the case of the girl's death

குழந்தைகளுடன் பெண் இறந்த வழக்கில் கணவர் உள்பட 3 பேர் கைது

குழந்தைகளுடன் பெண் இறந்த வழக்கில் கணவர் உள்பட 3 பேர் கைது
திருக்கோவிலூர் அருகே குழந்தைகளுடன் பெண் இறந்த வழக்கில் கணவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். கொடுமைப்படுத்தியதால் குழந்தைகளுடன் அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.
திருக்கோவிலூர்,

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கீழக்கொண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் இளங்கோவன் (வயது 37). தொழிலாளி. இவரது மனைவி தனலட்சுமி(30). இவர்களுக்கு கமலேஸ்வரன்(7), விஷ்ணுப்பிரியன்(4) மற்றும் ருத்திரன் என்கிற 4 மாத கைக்குழந்தையும் இருந்தது.

இளங்கோவன் தனது குடும்பத்துடன் விழுப்புரம் வழுதரெட்டி பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். கடந்த 10-ந்தேதி கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த தனலட்சுமி கணவரிடம் கோபித்துக் கொண்டு தனது 3 குழந்தைகளுடன் கீழக்கொண்டூரில் உள்ள மாமனார் வீட்டிற்கு வந்து விட்டார். நேற்று முன்தினம் அதிகாலை 5 மணியளவில் ராமசாமி டீக்கடைக்கு சென்றார். மாமியார் வேங்கையம்மாள் உறவினர் ஒருவருடைய இல்ல நிகழ்ச்சிக்கு சென்று விட்டார்.

பின்னர் சிறிது நேரத்தில் ராமசாமி வீடு திரும்பினார். அப்போது அவருடைய கூரை வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததோடு, உடல் கருகும் துர்நாற்றமும் வீசியது. இதைபார்த்த ராமசாமி மற்றும் அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். அதற்குள் கூரை வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானது. அப்போது தனலட்சுமி, அவரது குழந்தைகள் கமலேஸ்வரன், விஷ்ணுப்பிரியன், ருத்திரன் ஆகிய 4 பேரும் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் இளங்கோவன் தினசரி குடித்து விட்டு வந்து தனலட்சுமியை அடித்து, உதைத்து, பெற்றோர் வீட்டில் இருந்து பணம் வாங்கி வருமாறு கூறி கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது.

சம்பவத்தன்றும் இதுபோல் நடந்ததால் தனலட்சுமி மாமனார் வீட்டுக்கு வந்து ராமசாமியிடமும் வேங்கையம்மாளிடமும் இளங்கோவன் கொடுமைப்படுத்துவது பற்றி கூறி கதறி அழுதுள்ளார். ஆனால் அவர்கள் இளங்கோவனை கண்டிக்காமல், தனலட்சுமிக்கு ஆறுதல் கூறியுள்ளனர். இதில் மனமுடைந்த தனலட்சுமி, ராமசாமி வீட்டில் தனது 3 குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இதற்கிடையே தனலட்சுமி மற்றும் அவரது 3 குழந்தைகளின் சாவுக்கு காரணமான இளங்கோவன், வேங்கையம்மாள், ராமசாமி ஆகியோரை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டார். அதன் பேரில் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் மேற்பார்வையில் அரகண்டநல்லூர் இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் ஆகியோர் இளங்கோவன், ராமசாமி, வேங்கையம்மாள் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.