அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் புதிய கட்டிடம் திறப்பு விழா


அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் புதிய கட்டிடம் திறப்பு விழா
x
தினத்தந்தி 14 Sept 2018 6:08 AM IST (Updated: 14 Sept 2018 6:08 AM IST)
t-max-icont-min-icon

அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் புதிய கட்டிடம் திறப்பு விழா நடந்தது.

தென்தாமரைகுளம்,

அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் ரூ.38 லட்சம் செலவில் புதிய கருத்தரங்க கட்டிடம் கட்டப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. கல்லூரியின் முன்னாள் மாணவர் சென்னை ஆர்த்தி பிராய்லர்ஸ் உரிமையாளர் சுந்தரலிங்கம் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.

முன்னாள் மாணவி பேராசிரியை அமுதாமணி குத்துவிளக்கேற்றினார். தொடர்ந்து நடந்த திறப்பு விழா பொதுக்கூட்டத்துக்கு கல்லூரி முதல்வர் நீலமோகன் தலைமை தாங்கினார். பேராசிரியர் செந்தில்குமார் இறைவணக்கம் பாடினார். கட்டிட அமைப்பு குழு தலைவர் டி.சி.மகேஷ் வரவேற்று பேசினார்.

கல்லூரி தலைவர் துரைசுவாமி, செயலாளர் ராஜன், துணை தலைவர்கள் சந்திரமோகன், துரைசுவாமி, கோபிகிருஷ்ணன், இணை செயலாளர் மணி, உறுப்பினர்கள் சுப்பிரமணியம், மதுசூதனன், முன்னாள் முதல்வர்கள் ஆறுமுகம், மாலரசு ஆகியோர் வாழ்த்தி பேசினர். கட்டிட அமைப்புக்குழு செயலாளர் குருசாமி நன்றி கூறினார். பேராசிரியர் இளங்குமார் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.விழாவில் விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ராம்குமார், கல்வியியல் கல்லூரி முதல்வர் பையன், முன்னாள் மாணவர்கள் எட்வர்ட், மயில்தேவ், பொன்சுந்தர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story