மாவட்ட செய்திகள்

வைகை அணை பகுதியில் நீரில் மூழ்கி தொழிலாளி சாவு + "||" + The death of the laborer in the Vaigai dam area

வைகை அணை பகுதியில் நீரில் மூழ்கி தொழிலாளி சாவு

வைகை அணை பகுதியில் நீரில் மூழ்கி தொழிலாளி சாவு
ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை பகுதியில் குளித்த போது தொழிலாளி நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
ஆண்டிப்பட்டி,

பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவருடைய மகன் முத்துபாண்டி (வயது 18). இவர் 8-ம் வகுப்பு வரை படித்து விட்டு கூலிவேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று தனது நண்பர்களுடன் சேர்ந்து வைகை அணையிலிருந்து கால்வாய் மற்றும் ஆற்றுப்பகுதிக்கு தண்ணீர் பிரிக்கும் தடுப்பணையில் குளிக்க சென்றார்.

அங்கு தடுப்பணையில் இருந்து சென்ற நீரில் தனது நண்பர்களுடன் அவர் குளித்து கொண்டிருந்தார். அப்போது அவர் ஆழமான பகுதிக்கு சென்றார். அதில் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி இறந்தார். இதையடுத்து நண்பர்கள் வைகை அணை போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு போலீசாரும், தீயணைப்பு படையினரும் விரைந்து வந்து அவரை தேடினர். சுமார் 1 மணி நேரம் போராடி முத்துபாண்டியின் உடலை மீட்டனர்.

பின்னர் போலீசார் அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு எதிரொலி: வைகை அணை நீர்மட்டம் 57 அடியாக குறைந்தது
நீர்வரத்து குறைந்ததாலும், பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதாலும் வைகை அணை நீர்மட்டம் 57 அடியாக குறைந்துள்ளது.
2. நெய்வேலியில்: தடுப்புக்கட்டையில் மோட்டார் சைக்கிள் மோதல்; என்.எல்.சி. தொழிலாளி பலி
நெய்வேலியில் தடுப்புக்கட்டையில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் என்.எல்.சி. தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
3. 3 மாவட்ட பாசனத்துக்காக வைகை அணையில் தண்ணீர் திறப்பு - வினாடிக்கு 4,650 கனஅடி நீர் வெளியேற்றம்
மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கு பாசனத்துக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 4 ஆயிரத்து 650 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
4. வைகை அணையிலிருந்து உரிய நீரை பெற்று கண்மாய்களில் நிரப்ப நடவடிக்கை - கலெக்டர் தகவல்
வைகை அணையிலிருந்து உரிய பங்கீட்டு நீரை பெற்று சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கடைமடை பகுதியில் உள்ள அனைத்து கண்மாய்களிலும் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்தார்.
5. தொடர் மழை எதிரொலி: 64 அடியை எட்டிய வைகை அணை நீர்மட்டம் 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் 64 அடியை எட்டியது. இதனால் 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...