மாவட்ட செய்திகள்

விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் போதிய அளவு இருப்பில் உள்ளது - கலெக்டர் வீரராகவராவ் + "||" + Farmers have enough fertilizers

விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் போதிய அளவு இருப்பில் உள்ளது - கலெக்டர் வீரராகவராவ்

விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் போதிய அளவு இருப்பில் உள்ளது - கலெக்டர் வீரராகவராவ்
ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

 ராமநாதபுரம் மாவட்டத்தில் வேளாண் சாகுபடி பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. திருவாடானை, பரமக்குடி, முதுகுளத்தூர் மற்றும் நயினார்கோவில் ஆகிய வட்டாரங்களில் ஒருசில கிராமங்களில் விதைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது நிலவி வரும் பருவ சூழ்நிலை காரணமாக அநேக கிராமங்களில் பயிர் சாகுபடி செய்திட உழவுபணிகளும் நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு தேவையான முக்கிய வோளாண் இடுபொருட்களான ரசாயன உரங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

தற்போது யூரியா 2015 டன், டி.ஏ.பி– 841 டன், பொட்டாஷ் 135 டன், கலப்பு உரங்கள் 826 டன், சூப்பர் பாஸ்பேட் 30 டன் என மொத்தம் 3 ஆயிரத்து 847 டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அரசு நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விலைக்கு மிகாமல் உரங்கள் விற்பனை செய்வதை கண்காணிக்க 4 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர் மாவட்டத்தில் உள்ள உர விற்பனை மையங்களை ஆய்வு செய்து உர இருப்பு விவரம் மற்றும் விற்பனை விலையினை தகவல் பலகையில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க அறிவுறுத்தினர்.

மேலும் யூரியா 45 கிலோ மூடை அதிகபட்ச விலை ரூ.266.50 எனவும், டி.ஏ.பி., பொட்டாஷ் மற்றும் கலப்பு உரங்கள் மூடைகளில் அச்சடிக்கப்பட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமலும் விற்பனை செய்யப்படுகிறதா? எனவும் கண்காணிக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. உர விற்பனையாளர்கள் உரக்கட்டுப்பாட்டு சட்டம்–1985 உட்பட்டு உரங்களை விற்பனை செய்ய வேண்டும். இந்த சட்டத்தினை மீறுபவர்கள் மீது உரக்கட்டுப்பாட்டு சட்டம் 1985–ன்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. பரமக்குடியில் 17 ஊருணிகளை காணவில்லை; கண்டுபிடிக்கக்கோரி விவசாயி திடீர் தர்ணா
பரமக்குடி நகரசபை பகுதியில் இருந்த 17 ஊருணிகளை காணவில்லை என்பதால் அதனை கண்டுபிடித்து தரக்கோரி விவசாயி திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
2. சின்ன வெங்காய செடிகளுடன் வந்து கலெக்டரிடம் விவசாயிகள் மனு
கோவையில் அழுகிய சின்ன வெங்காயத்துக்கு கொள்முதல் நிலையம் திறக்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி சின்ன வெங்காய செடிகளுடன் வந்து விவசாயிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
3. மீன்கரை ரோட்டில் புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடையை மூடக்கோரி சப்–கலெக்டர் அலுவலகம் முற்றுகை
மீன்கரை ரோட்டில் புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடையை மூடக்கோரி சப்–கலெக்டர் அலுவலகத்தை ரெயில்வே தொழிலாளர்கள் மற்றும் பக்தர்கள் முற்றுகையிட்டனர்.
4. தூய்மை இந்தியா திட்டம் முழுமைபெற நடவடிக்கை - கலெக்டர் வீரராகவராவ் தகவல்
தூய்மை இந்தியா திட்டம் முழுமை பெற நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.
5. மணல் கடத்தல் வாகனங்களை விடுவிக்கக் கூடாது- கலெக்டர்களுக்கு மதுரை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
மணல் கடத்தலின்போது பிடிபடும் வாகனங்களை விடுவிக்கக்கூடாது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.