திருவல்லிக்கேணி அரசு பள்ளியில் பிளாஸ்டிக் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி


திருவல்லிக்கேணி அரசு பள்ளியில் பிளாஸ்டிக் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 15 Sept 2018 4:00 AM IST (Updated: 15 Sept 2018 1:11 AM IST)
t-max-icont-min-icon

சென்னை மாநகராட்சி மற்றும் எக்ஸ்னோரா தொண்டு நிறுவனம் சார்பில் பிளாஸ்டிக் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

சென்னை,

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சென்னை மாநகராட்சி மற்றும் எக்ஸ்னோரா தொண்டு நிறுவனம் சார்பில் பிளாஸ்டிக் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சியில், பிளாஸ்டிக் உபயோகிப்பதினால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக வாழை இலைகள், பாக்கு மர தட்டுகள், துணிப்பைகள், சணல் பைகள் போன்றவற்றை பயன்படுத்தலாம் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் உருவாகும் விதம், அதன் வாழ்க்கை சுழற்சி, உருவாகாமல் தடுக்கும் முறைகள் முதலியன குறித்தும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து பள்ளியை சுற்றிலும் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு மாணவிகள் பேரணியாக சென்று பிளாஸ்டிக் தீமைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேற்கண்ட தகவல் பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Next Story