பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன பேரணி


பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன பேரணி
x
தினத்தந்தி 15 Sept 2018 4:30 AM IST (Updated: 15 Sept 2018 1:51 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காஞ்சீபுரத்தில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன பேரணி நடத்தினார்கள்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட காங்கிரஸ் சார்பில் காஞ்சீபுரத்தில் கண்டன பேரணி நடைபெற்றது. ரபேல் போர் விமான ஒப்பந்தம் செய்வதில் ஊழல் நடைபெற்றது குறித்து விசாரிக்கும்படியும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும் இந்த பேரணி நடந்தது.

பேரணிக்கு காஞ்சீபுரம் முன்னாள் எம்.பி.பெ.விஸ்வநாதன் தலைமை தாங்கினார். இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று காஞ்சீபுரம் ரங்கசாமிகுளத்தில் இருந்து காஞ்சீபுரம் காவலான் கேட் வரை ஊர்வலமாக சென்றனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.

பின்னர் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கலெக்டர் அலுவலகத்தில் வழங்கினர்.

Next Story