மாவட்ட செய்திகள்

மறைமலைநகர் பகுதியில்4 மின் திருட்டுகள் கண்டுபிடிப்புரூ.17 லட்சம் அபராதம் + "||" + Maraimalainakar In the area 4 power steals detection

மறைமலைநகர் பகுதியில்4 மின் திருட்டுகள் கண்டுபிடிப்புரூ.17 லட்சம் அபராதம்

மறைமலைநகர் பகுதியில்4 மின் திருட்டுகள் கண்டுபிடிப்புரூ.17 லட்சம் அபராதம்
செங்கல்பட்டு மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட மறைமலைநகர் பகுதியில் கூட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, 4 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.
சென்னை,

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சென்னை மற்றும் செங்கல்பட்டு அமலாக்க கோட்ட அதிகாரிகள் செங்கல்பட்டு மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட மறைமலைநகர் பகுதியில் கூட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, 4 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த மின் திருட்டுகளுக்கு 17 லட்சத்து 36 ஆயிரத்து 263 ரூபாய் இழப்பீட்டு தொகையாக மின் நுகர்வோருக்கு விதிக்கப்பட்டது. மேலும் சம்பந்தப்பட்ட மின் நுகர்வோர்கள் குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க முன்வந்து கூடுதலாக சமரசத் தொகை 86 ஆயிரம் ரூபாய் செலுத்தியதால் அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் ஏதும் அளிக்கப்படவில்லை.

மின் திருட்டு சம்பந்தமான தகவல்களை 9445857591 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.