மாவட்ட செய்திகள்

மலாடு, கோரேகாவில்314 லிட்டர் கலப்பட பால் பறிமுதல்பெண்கள் உள்பட 6 பேர் கைது + "||" + Malad, Goregae 314 liters of milk is confiscated 6 people arrested including women

மலாடு, கோரேகாவில்314 லிட்டர் கலப்பட பால் பறிமுதல்பெண்கள் உள்பட 6 பேர் கைது

மலாடு, கோரேகாவில்314 லிட்டர் கலப்பட பால் பறிமுதல்பெண்கள் உள்பட 6 பேர் கைது
மலாடு, கோரேகாவில் 314 லிட்டர் கலப்பட பால் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பெண்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
மும்பை, 

மலாடு, கோரேகாவில் 314 லிட்டர் கலப்பட பால் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பெண்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

பாலில் கலப்படம்

மும்பை மலாடு கிழக்கு குவாரி ரோடு பகுதியில் சிலர் பிரபல நிறுவனங்களின் பால் பாக்கெட்டுகளில் கலப்படம் செய்து கடைகளில் விற்பனை செய்வதாக உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவத்தன்று அவர்கள் குற்றப்பிரிவு போலீசாருடன் சென்று அந்த பகுதியில் உள்ள ஒரு குேடானில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

இந்த சோதனையில், அங்கு 3 பேர் பால் பாக்கெட்டுகளை பிரித்து, அதில் இருந்து குறிப்பிட்ட அளவு பாலை எடுத்துவிட்டு அதற்கு பதிலாக தண்ணீைர கலந்து கொண்டிருந்ததை கண்டுபிடித்த னர். இதையடுத்து அதிரடியாக போலீசார் அந்த 3 பேரையும் கைது செய்தனர்.

6 பேர் கைது

அவர்கள் கொடுத்த தகவலின்பேரில், கோரேகாவிலும் இதேபோல பால் பாக்கெட்டுகளில் தண்ணீரை கலந்த மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேற்படி இரு சம்பவங்களிலும் கைதான 6 பேரில் இரண்டு பேர் பெண்கள் ஆவர். விசாரணையில், அவர்களது பெயர் கிருஷ்ண அம்பாதி (வயது49), அஞ்சையா முட்யாலா(32) சங்கர் ரச்சமல்லா(19), சாய்டாலு (32), சுஜாதா (25), ராமுலுஅம்மா (40) என்பது தெரியவந்தது.

அவர்களிடம் இருந்த 314 லிட்டர் கலப்பட பால் மற்றும் பிரபல பால் நிறுவனத்தின் பெயரில் இருந்த 629 பால் கவர்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் கைதான 6 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.