மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பா.ஜனதா கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்


மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பா.ஜனதா கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 Sept 2018 3:49 AM IST (Updated: 15 Sept 2018 3:49 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகே பா.ஜனதா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூர், 

திருப்பூர் பகுதியில் குண்டும்-குழியுமாக உள்ள சாலைகள் செப்பனிடாமல் இருப்பதை கண்டித்தும், சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது எனவே அடிப்படை வசதிகளை செய்துதர தவறிய மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகே நேற்று மாலை பா.ஜனதா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சின்னச்சாமி தலைமை தாங்கினார்.

கோட்ட இணை பொறுப்பாளர் பாயிண்ட் மணி, மாவட்ட பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன், மாநில கலை இலக்கிய பொறுப்பாளர் அழகு தமிழ்மணி, மாநில செயற்குழுவை சேர்ந்த பாஸ்கர், மண்டல் தலைவர் செந்தில்குமார், மண்டல் பொதுச்செயலாளர் சுரேஷ் வேலுசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தியும், மாநகராட்சியை கண்டித்தும் கோஷமிட்டனர்.

Next Story