மும்பையில் விதிமுறை மீறலில் ஈடுபட்ட 1,394 ஆட்டோ டிரைவர்கள் மீது நடவடிக்கை ரூ.11¼ லட்சம் அபராதம் வசூல்
மும்பையில் விதிமுறை மீறலில் ஈடுபட்ட 1,394 ஆட்டோ டிரைவர்கள் மீது வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
மும்பை,
மும்பையில் விதிமுறை மீறலில் ஈடுபட்ட 1,394 ஆட்டோ டிரைவர்கள் மீது வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.11 லட்சத்து 30 ஆயிரம் அபராதமும் வசூலிக்கப்பட்டு உள்ளது.
ஆட்டோ டிரைவர்கள்
மும்பையில் விதிமுறைகளுக்கு மாறாக ஆட்டோ டிரைவர்கள் அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றி செல்கிறார்கள். மேலும் பல ஆட்ேடா டிரைவர்கள் குறைந்த தூரம் என்பதற்காக பயணிகள் அழைக்கும் இடத்திற்கு சவாரிக்கு செல்ல மறுப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறு விதிமுறை மீறல் மற்றும் பயணிகள் அழைக்கும் இடத்துக்கு வர மறுக்கும் ஆட்டோ டிரைவர்களை கண்டறிந்து வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
அபராதம் வசூல்
இந்தநிலையில், மும்பையில் கடந்த 5 மாதங்களில் விதிமீறல்களில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரத்தை வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் வெளியிட்டு உள்ளனர்.
இதன்படி அதிக பயணிகளை ஏற்றிச்சென்ற, பயணிகள் அழைத்த இடத்துக்கு வர மறுத்த மற்றும் பயணிகளிடம் கடுமையாக நடந்து கொண்ட ஆட்டோ டிரைவர்கள் 1,394 பேர் பிடிபட்டனர்.
இவர்களிடம் இருந்து ரூ.11 லட்சத்து 30 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது. மேலும் இவர்களில் 82 பேரின் ஆட்டோ ெபர்மிட் மற்றும் 67 பேரின் ஓட்டுனர் உரிமம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story