தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்
விழுப்புரம் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம்,
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தீபாவளி பண்டிகை வருகிற நவம்பர் மாதம் 6-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க வெடிபொருள் சட்ட விதிகளின் கீழ் தற்காலிகமாக உரிமம் கோருபவர்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம். உரிமம் பெற உரிய ஆவணங்களுடன் தங்களது விண்ணப்பங்களை வருகிற 28-ந் தேதிக்கு முன்னதாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
தற்காலிக உரிமம் பெற விருப்பம் உள்ளவர்கள் அதற்கான படிவத்தை பூர்த்தி செய்த விண்ணப்பம் 4 பிரதிகள், தற்காலிக பட்டாசு உரிமம் கோரும் இடத்தின் அசல் வரைபடங்கள் 4 பிரதிகள், கடை வைக்கப்படும் இடத்தின் ஆவண பத்திரம் 4 நகல், உரிம கட்டணம் ரூ.500-ஐ உரிய அரசு கணக்கில் செலுத்தி அதற்கான அசல் செலுத்து சீட்டு போன்றவற்றுடன் விண்ணப்பிக்கலாம்.
மேலும் நிர்வாக காரணங்களை முன்னிட்டு வருகிற 28-ந் தேதிக்குள் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க உரிமம்கோரி வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை செய்யப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story