மாவட்ட செய்திகள்

பெண்ணை மிரட்டி 10 பவுன் நகை பறிப்பு + "||" + Intimidate the woman 10 pound jewelry flush

பெண்ணை மிரட்டி 10 பவுன் நகை பறிப்பு

பெண்ணை மிரட்டி 10 பவுன் நகை பறிப்பு
சின்னசேலம் அருகே பெண்ணை மிரட்டி 10 பவுன் நகையை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சின்னசேலம், 

சின்னசேலம் அருகே உள்ள வாசுதேவனூர் காட்டுக்கொட்டாயை சேர்ந்தவர் ரமேஷ் மனைவி திலகம்(வயது 40). இவருடைய மகள் யுவஸ்ரீ(12) சேலம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இதற்காக அவர் தினமும் வாசுதேவனூர் பஸ் நிறுத்தத்தில் இருந்து பள்ளி பேருந்தில் சென்று வந்தார். மேலும் திலகம் தனது மகளுடன் வாசுதேவனூர் பஸ் நிறுத்தத்துக்கு சென்று யுவஸ்ரீயை பேருந்தில் ஏற்றி விட்டு வருவது வழக்கம்.

இந்த நிலையில் சம்பவத்தன்றும் திலகம், யுவஸ்ரீயை பள்ளி பஸ்சில் ஏற்றி விட்டு வீட்டுக்கு வந்தார். சிறிது நேரத்தில் அவரை பின்தொடர்ந்து வந்த மர்மநபர் ஒருவர் திலகத்தின் வீட்டுக்குள் புகுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த திலகம் நீங்கள் யார்? என்று அந்த நபரிடம் கேட்டுள்ளார். உடனே அவர் திலகத்திடம், கழுத்தில் அணிந்திருக்கும் நகையை கழற்றிக்கொடுக்குமாறும், சத்தம் போட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த திலகம் தான் அணிந்திருந்த 10 பவுன் நகையை கழற்றி அருகில் இருந்த மேஜை மீது வைத்தார். இதையடுத்து அந்த மர்மநபர், நகையை எடுத்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார்.

பின்னர் இதுகுறித்து திலகம் சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர். 


தொடர்புடைய செய்திகள்

1. பரங்கிப்பேட்டை அருகே: மூதாட்டியை கத்தியால் வெட்டி நகை பறிப்பு - மர்ம மனிதர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
பரங்கிப்பேட்டை அருகே மூதாட்டியை கத்தியால் வெட்டி நகையை பறித்த மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
2. சின்னசேலம் அருகே: கத்தியை காட்டி மிரட்டி தச்சு தொழிலாளியிடம் நகை பறிப்பு - வாலிபர் கைது
சின்னசேலம் அருகே கத்தியை காட்டி மிரட்டி தச்சு தொழிலாளியிடம் நகையை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
3. கால்நடை டாக்டரின் மனைவியிடம் 6 பவுன் நகை பறிப்பு
திருச்செங்கோட்டில், முகவரி கேட்பதுபோல நடித்து கால்நடை டாக்டரின் மனைவியிடம் 6 பவுன் நகையை பறித்துச்சென்ற 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த துணிகர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
4. ஓய்வுபெற்ற ஆசிரியையிடம் நகை பறிப்பு - மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற மர்ம நபருக்கு வலைவீச்சு
பரமத்தி வேலூர் சக்தி நகரில் நடந்து சென்ற, ஓய்வுபெற்ற ஆசிரியையிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் தங்க நகையை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
5. தந்தை கண் முன் நர்சை தாக்கி நகை பறிப்பு
ஊத்தங்கரை அருகே தந்தை கண்முன் நர்சை தாக்கி நகை பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.