மாவட்ட செய்திகள்

தாட்கோ திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் + "||" + Apply to benefit from the Tadco program

தாட்கோ திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்

தாட்கோ திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்
தாட்கோ திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விழுப்புரம்,

தாட்கோ மூலம் ஆதிதிராவிடர்களுக்காக செயல்படுத்தப்படும் நிலம் வாங்கும் திட்டம், நிலம் மேம்பாடு திட்டம், துரித மின் இணைப்பு திட்டம், தொழில் முனைவோர் திட்டம், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டம், மருத்துவ மையம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்-லைன் மூலம் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

எனவே விழுப்புரம் மாவட்டத்தில் இந்த திட்டங்களின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 65 வயதிற்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.1 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். தாட்கோ இணையதள முகவரி http://appli cation.tahdco.com மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும்போது விண்ணப்பதாரர் பற்றிய முழு விவரங்கள், புகைப்படம், இருப்பிட சான்றிதழ் எண், சாதிச்சான்று எண், குடும்ப வருமான சான்றிதழ் எண், பட்டா, சிட்டா, குடும்ப அட்டை எண், ஆதார் எண், விண்ணப்பதாரரின் செல்போன் எண், இணையதள முகவரி, திட்டங்களின் விவரங்கள் ஆகியவற்றை இணையதளத்தில் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும்.

மேற்குறிப்பிட்ட ஆவணங்களை தவிர திட்டங்களுக்கு ஏற்றாற்போல் தேவைப்படும் ஆவணங்களையும் சமர்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் ஆன்-லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறுவதற்கு அறிவிக்கப்பட்ட நாட்களில் 24 மணி நேரமும் பதிவு செய்யலாம். மேலும் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க உதவி தேவைப்படுபவர்களின் வசதிக்காக தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் ரூ.60 செலுத்தி விண்ணப்பிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. கள்ளக்குறிச்சியில்: 425 ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் - கலெக்டர் சுப்பிரமணியன் வழங்கினார்
கள்ளக்குறிச்சியில், அரசு பொதுத்தேர்வில் பாடங்களில் 100 சதவீத தேர்ச்சி பெற்று தந்த 425 ஆசிரியர்களுக்கு மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
2. தீபாவளி பண்டிகையையொட்டி தரமற்ற இனிப்பு, கார வகைகளை விற்றால் கடும் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை
தீபாவளி பண்டிகையையொட்டி தரமற்ற இனிப்பு, கார வகைகளை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
3. திருக்கோவிலூர் அருகே: டெங்கு கொசு ஒழிப்பு பணி - கலெக்டர் சுப்பிரமணியன் ஆய்வு
திருக்கோவிலூர் அருகே நடந்த டெங்கு கொசு ஒழிப்பு பணியை கலெக்டர் சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
4. வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
5. விழுப்புரத்தில் புதிய ரெயில்வே மேம்பாலம் விரைவில் திறக்கப்படும் கலெக்டர் தகவல்
விழுப்புரத்தில் புதிய ரெயில்வே மேம்பாலம் விரைவில் திறக்கப்படும் என்று கலெக்டர் சுப்பிரமணியன் கூறினார்.