மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் சாவு + "||" + The driver of the car that ran down and killed indiscriminately

தாறுமாறாக ஓடிய ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் சாவு

தாறுமாறாக ஓடிய ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் சாவு
வேப்பூரில் தாறுமாறாக ஓடிய ஆட்டோ கவிழ்ந்ததில் அதன் டிரைவர் உயிரிழந்தார்.
வேப்பூர், 

வேப்பூரை சேர்ந்தவர் கணேசன் மகன் மஞ்சமுத்து(வயது 23). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு வேப்பூர் கூட்டுரோடு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் வாங்குதவற்காக தனது ஆட்டோவில் சென்றார். அப்போது அவருடன் அதே பகுதியை சேர்ந்த அவருடைய நண்பர்களான சந்தோஷ்(18), திலீப்குமார்(19) ஆகியோரும் ஆட்டோவில் சென்றனர். பின்னர் அங்கிருந்து, அதே ஆட்டோவில் வீடு திரும்பினர். அப்போது வேப்பூர் பஸ் நிறுத்தம் அருகே வந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ தாறுமாறாக ஓடி, சாலையோரம் கவிழ்ந்தது.

இதில் படுகாயமடைந்த மஞ்சமுத்து சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். மேலும் சந்தோஷ, திலீப்குமார் ஆகியோர் லேசான காயடைந்தனர். விபத்து பற்றி தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மஞ்சமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

1. மேல்மலையனூர் அருகே, ஆட்டோ கவிழ்ந்து பெண் பலி - 6 பேர் படுகாயம்
மேல்மலையனூர் அருகே ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...