மாவட்ட செய்திகள்

பள்ளி வாகனம் மீது மோதி மோட்டார் சைக்கிள் தீப்பிடித்ததுதமிழகத்தை சேர்ந்த 2 பேர் சாவு + "||" + Collide with the school vehicle Motorcycle flames Two people killed in Tamil Nadu

பள்ளி வாகனம் மீது மோதி மோட்டார் சைக்கிள் தீப்பிடித்ததுதமிழகத்தை சேர்ந்த 2 பேர் சாவு

பள்ளி வாகனம் மீது மோதி மோட்டார் சைக்கிள் தீப்பிடித்ததுதமிழகத்தை சேர்ந்த 2 பேர் சாவு
பெங்களூருவில், பள்ளி வாகனம் மீது மோதி மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது. முன்னதாக, மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து தமிழகத்தை சேர்ந்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பெங்களூரு, 

பெங்களூருவில், பள்ளி வாகனம் மீது மோதி மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது. முன்னதாக, மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து தமிழகத்தை சேர்ந்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

2 பேர் சாவு

பெங்களூரு சர்ஜாபுரா அருகே நேற்று காலையில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் திடீரென்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்ற தனியார் பள்ளி வாகனம் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

மேலும், பள்ளி வாகனம் மீது மோதி சாலையில் விழுந்த மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோல் கசிந்த நிலையில் ேமாட்டார் சைக்கிளும் தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக மோட்டார் சைக்கிளில் பிடித்த தீயை அணைக்க முயன்றனர். அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை. இதனால், மோட்டார் சைக்கிள் எரிந்து நாசமானது.

தமிழகத்தை சேர்ந்தவர்கள்

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் அத்திபெலே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், இறந்தவர்கள் தமிழ்நாடு பாகலூர் அருகே உள்ள டி.ஒசஹள்ளி கிராமத்தை சேர்ந்த மஞ்சுநாத் (வயது 40), ஸ்ரீநாத் (24) என்பதும், அவர்கள் பெங்களூரு மாயசந்திராவில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. வேலைக்காக அவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தபோது விபத்தில் சிக்கி இறந்ததும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து அத்திபெலே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆசிரியரின் தேர்வுகள்...