மாவட்ட செய்திகள்

டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ரிக் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் + "||" + Rick workers protest against rising diesel prices

டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ரிக் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ரிக் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போர்வெல் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விழுப்புரம்,

தமிழகம் முழுவதும் ரிக் உரிமையாளர்கள் (போர்வெல்) மற்றும் அதன் தொழிலாளர்கள், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், டீசல் விலை உயர்வுக்கு தகுந்தாற்போல் 1 அடிக்கு (6½ அங்குல போர்) ரூ.80 என்று விலை ஏற்றம் செய்யப்பட்டதை மக்களுக்கு தெரிவிக்கும் விதமாகவும் கடந்த 11–ந் தேதி முதல் 4 நாட்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள போர்வெல் வாகன உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் என 500–க்கும் மேற்பட்டோர் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை நிறுத்தி இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.

இந்த வேலை நிறுத்தத்தின் நிறைவாக நேற்று விழுப்புரத்தில் போர்வெல் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் பழனிச்சாமி தலைமை தாங்கினார்.

இதில் செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் ரபிக், துணைத்தலைவர் பாரதிராஜா, துணை செயலாளர் பாலமுருகன், நிர்வாகிகள் காமராஜ், பாலசுப்பிரமணி உள்பட பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து, இவர்கள் அனைவரும் ஆர்ப்பாட்டத்தை முடித்த பின்னர் நேற்று முதல் வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு சென்றனர்.தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோல் விலை 14 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைந்தது
பெட்ரோல் விலை லிட்டருக்கு 14 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைந்துள்ளது வாகன ஓட்டிகளுக்கு ஆறுதலை அளித்துள்ளது.
2. கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
மதுரையில் கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3. அன்னூர் அருகே: தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய 103 பேர் கைது
அன்னூர் அருகே தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 103 பேரை போலீசார் கைது செய்தனர்.
4. ஈரோடு மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
ஈரோடு மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
5. நெல்லை மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
நெல்லை மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.