அண்ணா பிறந்த நாள் விழா: சிலைக்கு மாலை அணிவித்து தலைவர்கள் மரியாதை


அண்ணா பிறந்த நாள் விழா: சிலைக்கு மாலை அணிவித்து தலைவர்கள் மரியாதை
x
தினத்தந்தி 15 Sep 2018 10:45 PM GMT (Updated: 15 Sep 2018 7:14 PM GMT)

அண்ணா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

புதுச்சேரி,

புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் தமிழக முன்னாள் முதல்–அமைச்சர் மறைந்த பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

இதனை முன்னிட்டு பழைய பஸ்நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் அமைச்சர் கந்தசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் அண்ணாவின் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு உப்பளத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அண்ணாவின் உருவ படத்திற்கு சட்டமன்ற தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பழைய பஸ்நிலையம் அருகே உள்ள அண்ணாசிலை நோக்கி அவர்கள் ஊர்வலமாக சென்றனர்.

அங்கு கட்சியின் மாநில செயலாளர் புருஷோத்தமன் தலைமையில் அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜாராமன், துணைச்செயலாளர் கணேசன், நகர செயலாளர் அன்பானந்தம் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

புதுவை மாநில முன்னாள் ஜெயலலிதா பேரவை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஓம் சக்தி சேகர் தலைமையில் பழைய பஸ்நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில இணை செயலாளர்கள் திருநாவுக்கரசு, காசிநாதன், முன்னாள் எம்.பி. ராமதாஸ், கோவிந்தம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக லெனின் வீதியில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அண்ணாவின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

புதுவை தெற்கு மாநில தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அவரது சிலைக்கு தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி, அமுதா குமார், பொருளாளர் குமாரவேல், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தைரியநாதன், இளங்கோவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அவர்கள் சுதேசி மில் அருகில் ஒன்று கூடி அங்கிருந்து அண்ணாசிலை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

வடக்கு மாநில தி.மு.க. சார்பில் மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் தலைமையில் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் முதல்–அமைச்சர் ஜானகிராமன், முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசு மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அவர் செஞ்சி சாலையில் உள்ள வடக்கு மாநில அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாநில செயலாளர் வக்கீல் வேல்முருகன் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் சுத்துக்கேணி பாஸ்கர், வி.கே. மூர்த்தி, மாநில துணைச்செயலாளர் பிரபுதாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

புதிய நீதிக்கட்சி சார்பில் மாநில தலைவர் பொன்னுரங்கம் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, காமராஜ், தேவநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

திராவிடர் கழகம் சார்பில் மாநில தலைவர் சிவ.வீரமணி தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் நிர்வாகிகள் ராசு, அறிவழகன், எழிலரசி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

காக்காயந்தோப்பில் எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் மாசிலா குப்புசாமி தலைமையில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அண்ணாவின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் நடராஜன், குமரன், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story