தனியார் நிறுவனத்தில் ரூ.42 லட்சம் கையாடல் காசாளருக்கு போலீஸ் வலைவீச்சு
சென்னை பாரிமுனையில் உள்ள தனியார் நிறுவனத்தில் காசாளர் ரூ.42 லட்சம் கையாடல் செய்திருப்பது தெரியவந்தது.
பிராட்வே,
சென்னை பாரிமுனை ஆண்டர்சன் தெருவில் உள்ள சோமசுந்தரம் (வயது 52) என்பவருக்கு சொந்தமான தனியார் நிறுவனத்தில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த சஞ்சய்குமார் (40) கடந்த 10 ஆண்டுகளாக காசாளராக வேலைபார்த்து வந்தார். அனைத்து வரவு, செலவு கணக்குகளையும் சஞ்சய்குமார் பொறுப்புடன் பார்த்துக்கொண்டதால் அவரை, சோமசுந்தரம் பெரிதும் நம்பினார்.
இந்த நிலையில் சஞ்சய்குமாரின் நடவடிக்கையில் திடீரென மாற்றம் ஏற்பட்டது. இதனால் சோமசுந்தரம் வரவு-செலவு கணக்குகளை ஆராய்ந்தார். அப்போது கணக்கில் இருந்து ரூ.2 லட்சம் குறைந்தது. இதுபற்றி அவரிடம் கேட்டபோது, சரிவர பதில் அளிக்கவில்லை. பின்னர் சஞ்சய்குமார் திடீரென மாயமாகி விட்டார். இதையடுத்து இதுவரை உள்ள வரவு-செலவு கணக்குகளை ஆய்வு செய்தபோது சஞ்சய்குமார் ரூ.42 லட்சம் கையாடல் செய்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சோமசுந்தரம் எஸ்பிளனேடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சஞ்சய்குமாரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story