மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கு: நிர்மலா தேவி உள்பட 3 பேரையும் நாளை கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவு


மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கு: நிர்மலா தேவி உள்பட 3 பேரையும் நாளை கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவு
x
தினத்தந்தி 15 Sep 2018 10:15 PM GMT (Updated: 15 Sep 2018 7:40 PM GMT)

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் நிர்மலா தேவி உள்பட 3 பேரையும் நாளை கோர்ட்டில் ஆஜர்படுத்த கோர்ட்டு உத்தரவிட்டது.

விருதுநகர்,

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கைது செய்யப்பட்டுள்ள அக்கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மதுரை காமராஜ் பல்கலைக்கழக பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகிய 3 பேரும் சி.பி.சி.ஐ.டி போலீசாரால் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் கோர்ட்டு உத்தரவுப்படி இவர்கள் 3 பேரையும் ஆஜர்படுத்த இயலாத நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கால அவகாசம் கேட்டு விருதுநகர் 2–வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு செய்தனர்.

 இதைதொடர்ந்து அவர்கள் 3 பேரையும் நாளை (திங்கட்கிழமை) விருதுநகர் கோர்ட்டில் ஆஜர்படுத்த மாஜிஸ்திரேட்டு திலகேஸ்வரி உத்தரவிட்டார்.


Next Story