ரூ.38¼ கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால்கள் தூர்வாரும் பணி தீவிரம்
மழைக்காலங்களில் சாலைகளில் மழைநீர் தேங்காமல் இருக்க மழைநீர் வடிகால்கள் தூர்வாரும் பணிகள் அந்தந்த மண்டலங்களில் துரிதமாக நடைபெற்று வருகிறது.
சென்னை,
மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணிகளுக்காக ரூ.20.40 கோடி மதிப்பீட்டிலும், குழாய்களில் அடைப்பு நீக்கும் உள்பட இதர பணிகளுக்காக ரூ.17.83 கோடி மதிப்பீட்டிலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்தந்த மண்டலங்கள் மூலமாக பணிகள் நடைபெற்று வருகிறது. மக்கள் தொகை அதிகமுள்ள பகுதிகள், வணிக பகுதிகள் மற்றும் கழிவுநீர் கால்வாய்கள் இல்லாத காரணத்தால் கழிவுநீர் கலக்கும் வடிகால்களில் உயர்திறன் கொண்ட உறிஞ்சும் எந்திரங்கள் மூலம் தூர்வாரப்படுகிறது. இந்த தூர்வாரும் பணிகள் அக்டோபர் மாத இறுதிக்குள் முடிக்கப்படும்.
ஒட்டுமொத்தமாக மழைக்காலங்களில் வெள்ளப் பாதிப்புகளிலிருந்தும், சாலைகளில் மழைநீர் தேங்காமல் இருக்கவும், ரூ.38.23 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால்கள் தூர்வாரும் பணிகள் அந்தந்த மண்டலங்களில் துரிதமாக நடைபெற்று வருகிறது. தூர்வாரும் பணிகள் முறையாக நடைபெறுகிறதா என்பதை மண்டல அலுவலர்களும், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களும் நேரில் சென்று அவ்வப்போது ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. ஏதாவது குறைகள் கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மேற்கண்ட தகவல் பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story