110–வது பிறந்தநாள் விழா: அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு
110–வது பிறந்தநாள் விழாவையொட்டி கடலூரில் உள்ள அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
கடலூர்,
தமிழகத்தின் முன்னாள் முதல்–அமைச்சர் அண்ணாவின் 110–வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கடலூர் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு அருகில் உள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் நகர செயலாளர் குமரன் தலைமையில், மருத்துவ அணி மாநில துணை செயலாளர் டாக்டர் சீனுவாசராஜா, மாவட்ட துணை செயலாளர் முருகுமணி, ஒன்றிய செயலாளர் பழனிசாமி, எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் சேவல்குமார், மீனவர் அணி செயலாளர் கே.என்.தங்கமணி, ஜெயலலிதா பேரவை பொருளாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட அவைத்தலைவர் கோ.அய்யப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் கூட்டுறவு சங்க தலைவர்கள் ரவிச்சந்திரன், ஆதிபெருமாள், ராமலிங்கம், சபரி, லாரி உரிமையாளர் சங்க தலைவர் பிரகாஷ், மாவட்ட பிரதிநிதி வெங்கட்ராமன், முன்னாள் கவுன்சிலர்கள் கந்தன், அன்பு, சர்தார், ஆர்.வி.மணி, பிருந்தாசங்கர், கோண்டூர் குமார், ஒன்றிய மாணவர் அணி செயலாளர் விஜயராயலு, வார்டு செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், தலைமை கழக பேச்சாளர் அன்பழகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கடலூர் நகர தி.மு.க. சார்பில் நகர செயலாளர் கே.எஸ்.ராஜா முன்னிலையில் தேர்தல் பணிக்குழு செயலாளர் இள.புகழேந்தி தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் மாவட்ட அவைத்தலைவர் து.தங்கராசு, நகரசபை முன்னாள் தலைவர் ஏ.ஜி.ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் வி.எஸ்.எல்.குணசேகரன், நகர துணை செயலாளர்கள் சுந்தரமூர்த்தி, அஞ்சாபுலி, மாவட்ட பிரநிதிகள் கோவலன், கணேசன், ரெங்கநாதன், ராஜேந்திரன், நரக பொருளாளர் சலீம், தலைமை நிலைய பேச்சாளர் கு.வாஞ்சிநாதன், மாணவர் அணி அமைப்பாளர் நடராஜன், துணை அமைப்பாளர்கள் பாலாஜி, அகஸ்டின் பிரபாகரன், தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் கே.எஸ்.ஆர்.கார்த்திக், மகளிர் அணி நிர்வாகி எல்சா, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் ஏ.ஜி.சம்பத் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, வார்டு நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நகர செயலாளர் தங்க வினோத்ராஜ் தலைமையில் மாவட்ட அவைத்தலைவர் டி.ஜி.என்.ராமலிங்கம் அண்ணாசிலைக்கு மாலை அணிவித்தார். இதில் மாநில மருத்துவர் அணி செயலாளர் ராஜாபழனிவேல், இணைசெயலாளர் இளங்கோவன், துணை செயலாளர் சலீம், ஒன்றிய செயலாளர்கள் ராயல், செந்தில்குமார், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் ஏ.கே.பாஷா, எம்.ஜி.ஆர்.மன்ற துணை தலைவர் ரவி, மீனவர் அணி செயலாளர் கலைமாறன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சிவகுமார், நகர அவைத்தலைவர் சேகர், மாவட்ட பிரதிநிதி செந்தில்நாயகம், அண்ணாதொழிற்சங்கம் ராஜராஜன், வக்கீல் அணி சத்தியராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மாவட்ட எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட துணை செயலாளர் சதீஷ், இளைஞர் அணி கவுதம், நகர அவைத்தலைவர் ஜெகநாதன், நகர செயலாளர் பிரபாகரன், துணை செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய பொருளாளர் நாகராஜன், ஒன்றிய செயலாளர்கள் ஜெயபால், பெருமாள், மாவட்ட பிரதிநிதி நடராஜ், வார்டு செயலாளர் கோபால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.