மாவட்ட செய்திகள்

தலைவாசல் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் + "||" + Near the headquarters People asking drinking water Road stroke with empty colonies

தலைவாசல் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல்

தலைவாசல் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல்
தலைவாசல் அருகே குடிநீர்கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தலைவாசல்,

தலைவாசல் அருகே பகடப்பாடி கிராமம் உள்ளது. இந்த பகுதியில் கடந்த 6 மாதத்திற்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் தலைவாசல் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர். அதன் பின்பும் அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.


இந்தநிலையில் நேற்று பகடப்பாடி பஸ்நிறுத்தம் அருகே பொதுமக்கள் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென கோரிக்கை அட்டைகள், காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், வீரகனூர் போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் 6 மாதத்திற்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் நாங்கள் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம். இதன் காரணமாக மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறோம். இது தொடர்பாக அதிகாரிகளிடம் தெரிவித்தாலும் கண்டுகொள்வதில்லை. இனிமேலாவது குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதைக்கேட்ட அதிகாரிகள், உங்கள் பகுதிக்கு உடனடியாக குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் உறுதியளித்தனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


தொடர்புடைய செய்திகள்

1. குடிநீருடன் சாக்கடை கழிவுநீர் வருவதாக கூறி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்
குடிநீருடன் சாக்கடை கழிவுநீர் கலந்து வருவதாக கூறி டி.எம்.சி. காலனி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2. தடாகம், கணுவாய் பகுதியில் அட்டகாசம் அதிகரிப்பு: கும்கிகள் வந்தும் காட்டு யானைகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறல்
கும்கிகள் வந்தும், தடாகம், கணுவாய் பகுதியில் அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை சமாளிக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
3. கொட்டாம்பட்டியில் தொடரும் மின்தடையால் பொதுமக்கள் அவதி; சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
கொட்டாம்பட்டி பகுதியில் கஜா புயலால் கடும் பாதிப்பு ஏற்பட்டதில் ஏராளமான மரங்கள் விழுந்ததில் கொட்டாம்பட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 50–க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்து சேதமடைந்தன.
4. வடகோவை மேம்பாலத்தில் நெருப்பு பலூன்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய வாலிபர்களால் பரபரப்பு
நெருப்பு பலூன்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய வாலிபர்களால் பரபரப்பு ஏற்பட்டது.இதனால் பொதுமக்கள் பீதிஅடைந்தனர்.
5. பாசி படர்ந்து துர்நாற்றம் வீசும் கண்ட தேவி கோவில் ஊருணி, சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
தேவகோட்டை அருகே உள்ள கண்டதேவி கோவில் ஊருணியில் பாசி படர்ந்து தற்போது துர்நாற்றம் வீசி வருகிறது. இதை உடனே சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.