மின்சார ரெயிலில் பெண்கள் பெட்டியை அசுத்தப்படுத்திய வாலிபருக்கு 5 நாள் ஜெயில் ரெயில்வே கோர்ட்டு தீர்ப்பு


மின்சார ரெயிலில் பெண்கள் பெட்டியை அசுத்தப்படுத்திய வாலிபருக்கு 5 நாள் ஜெயில் ரெயில்வே கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 16 Sept 2018 4:00 AM IST (Updated: 16 Sept 2018 2:16 AM IST)
t-max-icont-min-icon

மின்சார ரெயிலில் பெண்கள் பெட்டியை அசுத்தப்படுத்திய வாலிபருக்கு 5 நாள் ஜெயில் தண்டனை விதித்து ரெயில்வே கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

மும்பை, 

மின்சார ரெயிலில் பெண்கள் பெட்டியை அசுத்தப்படுத்திய வாலிபருக்கு 5 நாள் ஜெயில் தண்டனை விதித்து ரெயில்வே கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

பெண்கள் பெட்டியில் மனித கழிவு

மும்பை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன் மின்சார ரெயில் ஒன்று பத்லாப்பூர் சென்றது. அந்த ரெயிலின் பெண்கள் பெட்டியில் இருக்கைகளில் மனித கழிவுகள் கிடந்தன. பத்லாப்பூரில் அந்த ரெயிலில் ஏறிய பயணிகள் இதை பார்த்து முகம் சுழித்தனர். பின்னர் பெட்டி சுத்தம் செய்யப்பட்ட பின்னர் அந்த ரெயில் அங்கிருந்து கிளம்பியது.

மனித கழிவு கிடந்த பெண்கள் பெட்டியில் கண்காணிப்பு கேமரா உள்ளது. அதில், இருந்த காட்சிகளை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஆய்வு செய்தனர்.

வாலிபர் கைது

இதில், சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையத்தில் அந்த ரெயில் நின்று கொண்டு இருந்த போது, காலை 6.56 மணிக்கு அந்த பெட்டிக்குள் வாலிபர் ஒருவர் பாலித்தீன் பையில் மனித கழிவுடன் ஏறுகிறார். பின்னர் அந்த பெட்டியில் தனது பேண்டை கழற்றி ஆபாச செயலில் ஈடுபடும் அவர், தொடர்ந்து தனது கையில் இருக்கும் மலத்தை இருக்கைகளில் வீசிவிட்டு இறங்கும் காட்சி தெளிவாக பதிவாகி இருந்தது.

இதையடுத்து போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை கொண்டு அந்த வாலிபரை தேடிவந்தனர்.

இந்தநிலையில், நேற்றுமுன்தினம் சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த அந்த வாலிபரை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் அடையாளம் கண்டுபிடித்து அவரை கைது செய்தனர்.

5 நாள் ஜெயில்

விசாரணையில், அவர் ராய்காட் மாவட்டம் கர்ஜத்தை சேர்ந்த தினேஷ் லட்சுமண் துர்வே(வயது26) என்பது தெரியவந்தது. ைபகுல்லாவில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் வேலை பார்த்து வரும் அவர், இரவு சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலைய வளாகத்தில் வந்து படுத்து தூங்குவதை வழக்கமாக கொண்டிருந்து உள்ளார்.

இதுவரை 10 ரெயிலில் பெண்கள் பெட்டியில் தனது மலத்தை அள்ளி வீசியும், பெண்கள் பெட்டிக்குள் ஆபாச செயலில் ஈடுபட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் அவரை ரெயில்வே கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டு அவருக்கு 5 நாள் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.

Next Story