புனேயில் பரபரப்பு கல்வி வாரிய அலுவலகத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
புனேயில் உள்ள மாநில கல்வி வாரிய அலுவலகத்தில் இளம்பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புனே,
புனேயில் உள்ள மாநில கல்வி வாரிய அலுவலகத்தில் இளம்பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இளம்பெண் தீக்குளிப்பு
புனே சிவாஜி நகரில் மராட்டிய மாநில உயர் மற்றும் மேல்நிலை கல்வி வாரிய அலுவலகம் உள்ளது. நேற்றுமுன்தினம் இந்த அலுவலகத்துக்கு பூனம் ஜாதவ்(வயது24) என்ற இளம்பெண் வந்தார். பின்னர் அலுவலகத்தின் 3-வது மாடிக்கு சென்ற அந்த இளம்பெண் திடீரென அங்குள்ள கழிவறைக்கு சென்று தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார்.
இதில், உடல் முழுவதும் தீ பரவி எரிந்தது. இதனால் வேதனை தாங்க முடியாமல் அவர் அலறினார். கழிவறைக்குள் இருந்து குபுகுபுவென கரும்புகை வெளியேறியது.
பரிதாப சாவு
இதை பார்த்து கல்வி வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்து, 80 சதவீதம் தீக்காயம் அடைந்த இளம்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக சசூன் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
காரணம் என்ன?
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில், கல்வி வாரிய அலுவலகத்தில் வேலை பார்த்து வரும் ஒருவரை பூனம் ஜாதவ் காதலித்து வந்துள்ளார். ஆனால் அவர் காதலிக்கும் நபர் வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக அவர் பூனம் ஜாதவுடன் பழகுவதை தவிர்த்து இருக்கிறார். இதனால் விரக்தி அடைந்த அவர் கல்வி வாரிய அலுவலகத்துக்கு வந்து தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
மாநில கல்வி வாரிய அலுவலகத்தில் இளம்பெண் தீக்குளித்த சம்பவம் புனேயில் பரபரப்ைப ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story