தர்மபுரியில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்


தர்மபுரியில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 16 Sept 2018 4:30 AM IST (Updated: 16 Sept 2018 2:57 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரியில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தர்மபுரி,

மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் பிறந்தநாள் விழா தர்மபுரியில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி 4 ரோட்டில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அவர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

தர்மபுரி மாவட்ட அ.தி. மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாளையொட்டி நகர செயலாளர் குருநாதன் தலைமையில் பெரியார் சிலையில் இருந்து கட்சி நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று 4 ரோட்டை வந்தடைந்தனர். அங்குள்ள அண்ணா சிலைக்கு நகர கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட பொருளாளர் நல்லதம்பி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சிங்காரம், குப்புசாமி, ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிரகாசம், பெரியண்ணன், குமார், முன்னாள் ஒன்றிய செயலாளர் கோவிந்தசாமி, அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பழனிசாமி, முன்னாள் நகராட்சி கவுன்சிலர் பூக்கடை ரவி, நிர்வாகி வடிவேல் உள்பட கட்சி நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

இதேபோன்று தர்மபுரி பஸ்நிலையம் அருகில் இருந்து தி.மு.க. நகர செயலாளர் தங்கராஜ் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக 4 ரோட்டை வந்தடைந்தது. அங்குள்ள அண்ணா சிலைக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் இன்பசேகரன் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத்தலைவர் மாதையன், முன்னாள் நகராட்சி தலைவர் சிட்டி முருகேசன், முன்னாள் எம்.எல்.ஏ. மனோகரன், ஒன்றிய செயலாளர்கள் சேட்டு, சண்முகம், மாவட்ட நிர்வாகிகள் பிரபு ராஜசேகர், ராஜா, தங்கமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தர்மபுரி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் டி.கே.ராஜேந்திரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பெரியார் சிலையில் இருந்து ஊர்வலமாக வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதில் எம்.ஜி.ஆர். இளைஞரணி மாநில இணை செயலாளர் ஆர்.ஆர்.முருகன், மாவட்ட துணை செயலாளர் ஏகநாதன், முன்னாள் மாவட்ட செயலாளர் பூக்கடை முனுசாமி, நகர செயலாளர் மணிவண்ணன், மாநில தகவல் தொழில் நுட்ப பிரிவு தலைவர் பாலு, ஒன்றிய செயலாளர்கள் பாஸ்கர், கணேசன், சென்னகேசவன், நகர பேரவை செயலாளர் பெருமாள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தர்மபுரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் இளையமாதன் தலைமையில் நிர்வாகிகள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில் மாநில நிர்வாகி தகடூர் தமிழ்செல்வி, நிர்வாகிகள் கதிர், சிவாஜி, தமிழ்செல்வன், பரமசிவம், ஜனகராஜ், ராமச்சந்திரன், காமராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story