பேரணாம்பட்டு அருகே குழந்தை பிரசவித்த பெண் திடீர் சாவு உதவி கலெக்டர் விசாரணை


பேரணாம்பட்டு அருகே குழந்தை பிரசவித்த பெண் திடீர் சாவு உதவி கலெக்டர் விசாரணை
x
தினத்தந்தி 16 Sept 2018 3:37 AM IST (Updated: 16 Sept 2018 3:37 AM IST)
t-max-icont-min-icon

பேரணாம்பட்டு அருகே குழந்தை பிரசவித்த பெண் திடீரென்று இறந்தார்.

பேரணாம்பட்டு,

பேரணாம்பட்டு அருகே உள்ள பத்தலபல்லி கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் சங்கீதா (வயது 23). இவரும் அதே கிராமத்தை சேர்ந்த ராகதேவன் (26) என்பவரும் காதலித்து கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் கர்ப்பிணியான சங்கீதாவிற்கு கடந்த 4-ந் தேதி அறுவை சிகிச்சை மூலம் அழகான ஆண் குழந்தை பிறந்தது.

இதனையடுத்து கடந்த 10-ந் தேதி சங்கீதா ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார். அங்கு அவருக்கு சளி தொல்லை ஏற்பட்டதால் நேற்று முன்தினம் சிகிச்சைக்காக பேரணாம்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சங்கீதாவிற்கு திருமணமாகி 1½ ஆண்டுகளே ஆவதால் வேலூர் உதவி கலெக்டர் மேகராஜ் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story