மாவட்ட செய்திகள்

ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில்காதல் ஜோடி தஞ்சம் + "||" + At the police station Romantic Couple asylum

ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில்காதல் ஜோடி தஞ்சம்

ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில்காதல் ஜோடி தஞ்சம்
ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் காதல் திருமணம் செய்த ஜோடி தஞ்சம் அடைந்தனர்.
ஜோலார்பேட்டை,

ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகன் விஜய் (வயது 28). பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். திருப்பத்தூர் அருகே உள்ள இருணாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பிரேம்குமார். இவரது மகள் மரிக்கொழுந்து (27). திருப்பத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். விஜய்யும், மரிக்கொழுந்தும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இவர்களின் காதல் விவகாரம் வீட்டிற்கு தெரியவரவே, இருதரப்பு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியே வந்து, திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் காதல் திருமணம் செய்துகொண்ட விஜய்யும் - மரிக்கொழுந்தும் நேற்று ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். பின்னர் இருதரப்பு பெற்றோரையும் போலீசார் அழைத்து சமாதானம் செய்து, அவர்களுக்கு அறிவுரை வழங்கினர். பின்னர் மரிக்கொழுந்தை மாப்பிள்ளை வீட்டார் அழைத்து சென்றனர்.