பாளை.யில் அண்ணா பிறந்தநாளையொட்டி மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு உதயகுமார் தொடங்கி வைத்தார்


பாளை.யில் அண்ணா பிறந்தநாளையொட்டி மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி  கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு உதயகுமார் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 15 Sep 2018 10:30 PM GMT (Updated: 15 Sep 2018 10:18 PM GMT)

அண்ணா பிறந்தநாளையொட்டி பாளையங்கோட்டையில் நடந்த மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டியை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு உதயகுமார் தொடங்கி வைத்தார்.

நெல்லை, 

அண்ணா பிறந்தநாளையொட்டி பாளையங்கோட்டையில் நடந்த மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டியை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு உதயகுமார் தொடங்கி வைத்தார்.

சைக்கிள் போட்டி 

பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நெல்லை பிரிவு சார்பில் மாவட்ட அளவிலான வேகமாக சைக்கிள் ஓட்டும் போட்டி பாளையங்கோட்டையில் நேற்று நடந்தது. சைக்கிள் போட்டியை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு உதயகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த போட்டி அண்ணா விளையாட்டு மைதானத்தில் இருந்து தொடங்கி வி.எம்.சத்திரம் வரை சென்று வந்தது. இந்த போட்டியில் 316 மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர்.

ஆண்கள் பிரிவில் 13 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில் பாளையங்கோட்டை அப்துல்ரகுமான் மேல்நிலைப்பள்ளி மாணவர் கவுதம் முதல் இடமும், சேவியர் மேல்நிலைப்பள்ளி மாணவர் சிவசுப்பிரமணியன் 2–வது இடமும், புனித அந்தோணியார் பள்ளி மாணவர் அட்ரின் சாமுவேல் 3–வது இடமும் பெற்றனர். 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில் பாளையங்கோட்டை சேவியர் மேல்நிலைப்பள்ளி மாணவர் தீபக் முதல் இடமும், மாணவர் முத்துசாமி 2–வது இடமும், அப்துல்ரகுமான் மேல்நிலைப்பள்ளி மாணவர் ரமேஷ் 3–வது இடமும் பிடித்தனர்.

17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில் பாளையங்கோட்டை அப்துல்ரகுமான் மேல்நிலைப்பள்ளி மாணவர் சிவன்பாண்டி முதல் இடமும், விக்கிரமசிங்கபுரம் பி.எல்.யூ.மேல்நிலைப்பள்ளி மாணவர் தாமோதரன் 2–வது இடமும், ரோஸ்மேரி மேல்நிலைப்பள்ளி மாணவர் நாவரசு 3–வது இடமும் பெற்றனர்.

மாணவிகள் 

பெண்கள் பிரிவில் 13 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில் பாளையங்கோட்டை புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி மாணவி முப்புடாதி முதல் இடமும், மாணவி விமலரசி 2–வது இடமும், மாணவி மற்றொரு முப்புடாதி 3–வது இடமும் பெற்றனர். 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில் பாளையங்கோட்டை குழந்தை ஏசு மேல்நிலைப்பள்ளி மாணவி முத்து, சிமிலி, சுல்தால் ஹசினா பர்கத் ஆகியோர் முறையே முதல் 3 இடங்களை பிடித்தனர்.

17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில் பாளையங்கோட்டை குழந்தை ஏசு மேல்நிலைப்பள்ளி மாணவி சீதாலட்சுமி முதல் இடமும், மாணவி பொன்மாரி 2–வது இடமும், மதுபாலா 3–வது இடமும் பிடித்தனர்.

இதைத்தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவுக்கு செல்வசிங் தலைமை தாங்கி, வெற்றி பெற்ற மாணவ–மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் வீரபத்ரன், பயிற்சியாளர்கள் வெங்கடேஷ், குமரமணிமாறன், சத்யகுமார், தாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 


Next Story