மாவட்ட செய்திகள்

பிறந்தநாளையொட்டி அண்ணா உருவப்படத்திற்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை + "||" + Birthday Anna to the image Political parties Attend the flowers

பிறந்தநாளையொட்டி அண்ணா உருவப்படத்திற்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

பிறந்தநாளையொட்டி அண்ணா உருவப்படத்திற்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
அண்ணா பிறந்த நாளையொட்டி அவருடைய உருவப்படத்திற்கு திருவெறும்பூரில் அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருவெறும்பூர்,

அண்ணா பிறந்த நாளையொட்டி பாய்லர் ஆலை அண்ணா தொழிற்சங்கத்தில் வைக்கப்பட்டிருந்த அவருடைய உருவப்படத்திற்கு அ.தி.மு.க, ஒன்றிய செயலாளர் எஸ்.எஸ்.ராவணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதில் ஜெயலலிதா பாசறை மாவட்ட செயலாளர் பவுன் டி.டி.கிருஷ்ணன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் என்.கார்த்திக், நவல்பட்டு ஊராட்சி செயலாளர் ஜெ.பாலமூர்த்தி, வாழவந்தான்கோட்டை கூட்டுறவு சங்க தலைவர் கதிரவன், கூத்தைப்பார் பேரூர் செயலாளர் முத்துக்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.


திருவெறும்பூர் 64, 65-வது வட்ட தி.மு.க. சார்பில் அண்ணா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நவல்பட்டு சாலையில் நடைபெற்றது. காட்டூர் பகுதி தி.மு.க. அவை தலைவரும், சர்வகட்சி கன்வீனருமான எம்.பழனியப்பன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 65-வது வார்டு வட்ட செயலாளர் வி.பி.குமார், காட்டூர் பகுதி துணை செயலாளர் ஜெயலெட்சுமி குமார், மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் பார்வதி பாரதிதாசன், இளைஞரணி பி.எல்.ரவீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் காட்டூரில் வைக்கப்பட்டிருந்த அண்ணா உருவப்படத்திற்கு முன்னாள் கவுன்சிலர் சிவசக்தி குமார் தலைமையில் பகுதி செயலாளர் ஓ.நீலமேகம் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்தனர்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நவல்பட்டில் வைக்கப்பட்டிருந்த அண்ணா உருவப்படத்திற்கு நவல்பட்டு அ.ம.மு.க. ஊராட்சி செயலாளர் என்.ஆர்.துளசிதாசன் தலைமையில் மாவட்ட பொருளாளர் எம்.திரிசங்கு, அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கே.வி.டி.கலைசெல்வன், ஒன்றிய செயலாளர் ஆனந்தராஜ், நவல்பட்டு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராணி ராஜலிங்கம், சானா.கார்த்திக், இளைஞரணி என்.ஆர்.டி.லிங்கேஸ்வரன் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

லால்குடியில் தாலுகா அலுவலகம் முன்பு அண்ணாவின் பிறந்த நாள் விழா நடைபெற்றது. அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சூப்பர் நடேசன் தலைமை தாங்கி அண்ணா உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அ.தி.மு.க. நகர செயலாளர்கள் லால்குடி சந்திரசேகரன், பூவாளூர் ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், முன்னாள் எம்.எல்.ஏ. பாலன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ரீனாசெந்தில், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் வி.டி.எம்.அருண்நேரு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர்கள் டோமனிக்அமல்ராஜ், நகர் ராஜா, ஆங்கரை குணசேகரன், ஆறுமுகம், கூகூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் செல்வழகன் மற்றும் அ.தி.மு.க. நகர, ஒன்றிய, ஊராட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...