தூத்துக்குடியில் அண்ணா பிறந்த நாள் விழா: உருவச்சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை


தூத்துக்குடியில் அண்ணா பிறந்த நாள் விழா: உருவச்சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 16 Sept 2018 4:52 AM IST (Updated: 16 Sept 2018 4:52 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய உருவ சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய உருவ சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

அ.தி.மு.க. 

தூத்துக்குடி மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணாவின் 110–வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட அவைத்தலைவர் ராஜன் தலைமையில் பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைப்பு சாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் பெருமாள்சாமி, முன்னாள் வாரிய தலைவர் அமிர்தகணேசன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், பொதுக்குழு உறுப்பினர் ஜான்சி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ராஜா, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் தளபதி கே பிச்சையா, மாவட்ட மகளிர் அணி செயலாளர் குருத்தாய் மற்றும் பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள்.

தி.மு.க. 

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் காய்கனி மார்க்கெட் அருகே உள்ள அண்ணா சிலைக்கு கீதாஜீவன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட துணை செயலாளர் ராஜ்மோகன் செல்வின், இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அ.ம.மு.க. 

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் ஹென்றி தாமஸ் தலைமையில், பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் துணை செயலாளர் பாலன், மாவட்ட தொழிற்சங்கம் துரையரசன், மகளிர் அணி அந்தோணி கிரேஸ், எட்வின் பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆர். கழகம் சார்பில் பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் அழகிரிசாமி தலைமை தாங்கினார். பொருளாளர் கணேசன், இளைஞர் அணி செயலாளர் கணேசன், நகர செயலாளர் சாமிநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story