தினம் ஒரு தகவல் : நவீன சமையலறை


தினம் ஒரு தகவல் : நவீன சமையலறை
x
தினத்தந்தி 16 Sept 2018 12:09 PM IST (Updated: 16 Sept 2018 12:09 PM IST)
t-max-icont-min-icon

மாடுலர் கிச்சன் என்று அமைக்கப்படும் சமையலறை தற்போது எல்லா வீடுகளிலும் பிரபலமாகி வருகிறது. இப்போது புதிதாக கட்டப்படும் எல்லா சமையலறைகளும் இந்த வகையிலேயே கட்டப்படுகின்றன.

 ஆனால், ஏற்கனவே கட்டப்பட்டு 15 ஆண்டுகள் ஆன வீடுகளில் உள்ள பழைய சமையலறைகளையும் ‘மாடுலர் கிச்சன்’களாக மாற்ற முடியும். பழைய வீடுகளில் இத்தகைய மாடுலர் கிச்சன்களைப் பொருத்த வேண்டுமானால் சில வழிகளை அறிந்து கொள்வது முக்கியம்.

‘மாடுலர் கிச்சன்’களை அமைத்துக் கொடுக்க நிறைய நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களைச் சேர்ந்தவர்களை விசாரித்து அழைத்தால், அவர்கள் வீட்டுக்கு வந்து ஆய்வு செய்வார்கள். எவ்வளவு செலவு ஆகும் என்பதையும் அவர்கள் சொல்லி விடுவார்கள். இதுதான் முதல் படி. முன் பணம் கட்ட வேண்டியிருக்கும். நேரில் கடைக்கு சென்று தேவையான மாடல், வண்ணம் போன்றவற்றை தேர்வு செய்வது அடுத்த நிலை. பொதுவாக மற்ற நிறங்களை காட்டிலும் பழுப்பு நிறத்தை தேர்வு செய்வதே நல்லது.

நிறுவனத்திலிருந்து பொறியாளர் வந்து அறையின் நீளம், அகலம் போன்றவற்றை துல்லியமாக அளப்பார்கள். பழைய சமையலறை, மாடுலருக்கு ஏற்றதாக இல்லாவிட்டால், சில மாற்றங்களை செய்ய வேண்டியிருக்கும். அதற்கும் செலவு தனி. நீங்கள் தேர்ந்தெடுத்த வரைபடத்தில் கையெழுத்து போட்டு ஒப்பு கொண்ட பின், மூன்று நான்கு வாரங்களில் மாடுலர் கிச்சன் அமைப்பதற்கான பேனல்கள் வரும். கோப்பைகள், தட்டுகள், இன்னும் பல பொருட்கள் வைப்பதற்கான கண்ணாடிகளும் இதில் அடக்கம்.

வேலை செய்ய வரும் நிபுணரிடம் எங்கெங்கு என்னென்ன பொருட்கள் இருக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே ஆலோசித்து தெரிவித்து விட வேண்டும். சமையலறையிலேயே சிறு பூஜை அறையும் சில இல்லங்களில் இருக்கக் கூடும். அப்படி இருந்தால் சாமி படங்களை பொருத்துகிற விதத்தையும் தெரிவித்து விட வேண்டும். சமையல் சிலிண்டர் வெளியே தெரியாதவாறு பொருத்துவார்கள். அப்போது உடன் இருந்து கண்காணிக்க வேண்டும். துவாரம் வைத்து அமைப்பது தான் அவர்கள் வேலை. பிறகு சிலிண்டர் குழாயை அடுப்புடன் இணைப்பது கியாஸ் கம்பெனி பொறுப்பு. பழைய சமையலறைகளை நவீன முறை கிச்சன்களாக மாற்ற அறையின் நீள அகலத்தை பொறுத்து செலவு ஆகும். 

Next Story