குற்றாலம்-களக்காட்டில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு குற்றாலம் மற்றும் களக்காட்டில் உள்ள அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தென்காசி,
அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு குற்றாலம் மற்றும் களக்காட்டில் உள்ள அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அ.தி.மு.க.
முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு குற்றாலத்தில் உள்ள அவருடைய சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு செல்வமோகன்தாஸ் பாண்டியன், எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, சிலைக்கு மாலை அணிவித்தார். நிகழ்ச்சியில் அ.தி.மு.க. மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், தென்காசி ஒன்றிய செயலாளர் சங்கரபாண்டியன், நகர செயலாளர் சுடலை, மேலகரம் செயலாளர் கார்த்திக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தி.மு.க.
இதேபோன்று, களக்காட்டில் தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அவருடைய சிலைக்கு தி.மு.க. மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஜின்னா தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் ஜார்ஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அ.ம.மு.க.
மேலும், அ.மு.ம.க. சார்பில் மாவட்ட செயலாளர் கல்லூர் வேலாயுதம் தலைமையில் களக்காட்டில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் பாபு, மாநில ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் பரமசிவ அய்யப்பன், மாநகர மாவட்ட அவை தலைவர் ஜெகநாதன் என்ற கணேசன், மாவட்ட துணை செயலாளர் ராஜன், மாவட்ட மீனவரணி நிர்வாகி வளன்அரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story