செங்கோட்டுகாவு அருகே ரெயிலில் அடிபட்டு கவுன்சிலர் சாவு


செங்கோட்டுகாவு அருகே ரெயிலில் அடிபட்டு கவுன்சிலர் சாவு
x
தினத்தந்தி 16 Sep 2018 10:00 PM GMT (Updated: 16 Sep 2018 7:49 PM GMT)

செங்கோட்டுகாவு அருகே ரெயிலில் அடிபட்டு கவுன்சிலர் பரிதாபமாக இறந்தார். செல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடந்த போது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

கோழிக்கோடு,

கண்ணனூர் மாவட்டம் மாகி பஞ்சாயத்தை சேர்ந்தவர் ஏ.பி.சமீர் (வயது 45). இவர் பஞ்சாயத்து கவுன்சிலராக இருந்து வந்தார். மேலும் இந்திய யூனியன் முஸ்லீக் கட்சி நிர்வாகியாகவும் இருந்தார். இவர் நேற்று தனது உறவினரை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காக கோழிக்கோடு விமான நிலையத்துக்கு சென்றார்.

பின்னர் தனது காரில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். செங்கோட்டுகாவு அருகே தனது காரை நிறுத்திவிட்டு டீக்குடிப்பதற்காக சென்றார். அப்போது செல்போனில் பேசியபடி ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

அப்போது அந்த வழியாக வந்த ரெயில் இவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஏ.பி.சமீர் படுகாயம் அடைந்தார். உடனே அவர் சிகிச்சைக்காக கொய்லாண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இவருக்கு சவுஜத் என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.


Related Tags :
Next Story