பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், பின்னலாடை தொழில் துறையினர் கோரிக்கை


பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், பின்னலாடை தொழில் துறையினர் கோரிக்கை
x
தினத்தந்தி 16 Sep 2018 10:15 PM GMT (Updated: 16 Sep 2018 8:11 PM GMT)

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என பின்னலாடை தொழில் துறையினர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் நாடு முழுவதும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக பின்னலாடை தொழில் துறையினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மின் வெட்டு அதிகமாக உள்ள நிலையில் ஜெனரேட்டரை பயன்படுத்தி வரும் பின்னலாடை தொழில்துறையினர் டீசல் விலை உயர்வால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மின்சாரத்தின் மூலம் ஒரு நாளைக்கு ஒருநிறுவனத்தில் குறைந்தது ஆயிரம் பீஸ்கள் தைக்கக்கூடிய தையல் எந்திரங்கள் மின்சாரம் இல்லாத நேரங்களில் டீசல் என்ஜின்களை பயன்படுத்தி துணிகள் தைக்கப்படும்போது 600 முதல் 700 வரை மட்டுமே தைக்க முடிகிறது.

பவர்டேபிள் தொழிலை பொறுத்தவரை ஓவர்லாக், பேட்லாக், போல்டிங் மற்றும் இதர மிஷின்கள் ஒரே நேரத்தில் பயன்படுத்தப்படுவதால் மின்சாரத்தின் பயன்பாடுஅதிகம்இருக்கும். ஆனால் டீசல் எஞ்சினை பயன்படுத்தும்போது உற்பத்தி குறைகிறது. பெட்ரோல்,டீசல் என்ஜின்களை பயன்படுத்தி பின்னலாடை தயாரிக்கும்போது செலவு அதிகரிக்கிறது. இதற்கிடையில் பின்னலாடை துறையில் மூலப்பொருட்களின் விலை கடந்த 2 மாதங்களில் 30 சதவீதம் உயர்ந்துள்ளது. தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பின்னலாடை தொழில் பாதிப்படைகிறது. எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். இதே கோரிக்கையை இந்தியா முழுவதும் உள்ள தொழில் துறையினர் வலியுறுத்தி வருகிறார்கள். பெட்ரோல் விலை கடந்த 1½ மாதத்தில் 5 ரூபாய் 23 காசும், டீசல் விலை 5 ரூபாய் 87 காசும் உயர்ந்துள்ளது.

இதன்காரணமாக பின்னலாடை தயாரிப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளது. வெளிமாநில வர்த்தகர்கள் பின்னலாடைகளை வாங்காமல் இருப்பதால் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வர வேண்டியது அவசியம் என்று பின்னலாடை தொழில் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story