லாரி மோதி மில் ஊழியர் பலி


லாரி மோதி மில் ஊழியர் பலி
x
தினத்தந்தி 17 Sept 2018 3:15 AM IST (Updated: 17 Sept 2018 1:52 AM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் அருகே லாரி மோதி மில் ஊழியர் பலினார்.

வேடசந்தூர், 

வேடசந்தூர் அருகே உள்ள விட்டல்நாயக்கன்பட்டியை சேர்ந்த கருப்பையா மகன் ஹரிகரன் (வயது 25). இவர், கிரியம்பட்டியில் உள்ள தனியார் மில்லில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். நேற்று காலை மில்லுக்கு வேலைக்கு செல்வதற்காக தனது ஊரில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். திண்டுக்கல்-வேடசந்தூர் சாலையில் கிரியம்பட்டி பகுதியில் சென்றபோது, பின்னால் வந்த லாரி ஒன்று அவருடைய மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த ஹரிகரன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த ஹரிகரனுக்கு திருமணமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story