குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
புதுச்சேரி,
ஜீவானந்தபுரம், பெத்துசெட்டிபேட்டை பகுதிகளில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவேண்டும், அசோக் நகர் பகுதியில் அரசு வழங்கிய வீடுகளில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்கவேண்டும் என்பனபோன்ற கோரிக்கையை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் லாஸ்பேட்டை தொகுதிக்குழு வலியுறுத்தி வருகிறது.
இவை உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி லாஸ்பேட்டை உழவர்சந்தை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தொகுதி செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.
தொகுதி பொருளாளர் சபாநாயகம், துணை செயலாளர் முத்து, தொகுதிக்குழு உறுப்பினர் கலியபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்டு மாநில பொருளாளர் சுப்பையா கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் கிளை தொகுதிக்குழு, கிளை நிர்வாகிகள் வீர.முருகையன், சுப்புராயன், ராமு, ராஜேந்திரன், பாலு, பாபு, கருணாகரன், ராமு, செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.