தாராவி காமராஜர் பள்ளியில் 420 மாணவர்களுக்கு ரூ.9¼ லட்சம் உதவித் தொகை டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் கல்வி நிதியில் இருந்து வழங்கப்பட்டது


தாராவி காமராஜர் பள்ளியில் 420 மாணவர்களுக்கு ரூ.9¼ லட்சம் உதவித் தொகை டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் கல்வி நிதியில் இருந்து வழங்கப்பட்டது
x
தினத்தந்தி 17 Sept 2018 5:30 AM IST (Updated: 17 Sept 2018 4:13 AM IST)
t-max-icont-min-icon

தாராவி காமராஜர் பள்ளியில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் கல்வி நிதியில் இருந்து 420 மாணவர்களுக்கு ரூ.9¼ லட்சம் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.

மும்பை, 

தாராவி காமராஜர் பள்ளியில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் கல்வி நிதியில் இருந்து 420 மாணவர்களுக்கு ரூ.9¼ லட்சம் கல்வி உதவி தொகை வழங்கப்பட் டது.

கல்வி நிதி

மும்பையில் திருநெல்வேலி தெட்சணமாற நாடார் சங்க மும்பை கிளை நிர்வகித்து வரும் காமராஜர் நினைவு ஆங்கில உயர்நிலைப்பள்ளி மற்றும் இளநிலைக்கல்லூரி டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் கல்வி வளாகத்தில், 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நாடார் சமுதாய மாணவ, மாணவிகளின் உயர் கல்விக்காக ஆண்டுதோறும் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் கல்வி நிதியில் இருந்து கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

2018-19-ம் கல்வி ஆண்டுக்கான உதவித் தொகை வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவுக்கு தெட்சணமாற நாடார் சங்க தலைவர் டி.ஆர்.சபாபதி நாடார் தலைமை தாங்கினார்.

420 மாணவர்களுக்கு...

மும்பை கிளை சேர்மன் ராமராஜா நாடார், செயலாளர் காசிலிங்கம் நாடார், உதவி சேர்மன் ரெம்ஜிஸ் நாடார், நிர்வாக உறுப்பினர்கள் கோயில்ராஜ் நாடார், மதிசெல்வன் நாடார், எம்.சி.கே.பொன்ராஜ் நாடார், லிங்கத்துரை நாடார், பள்ளிக்குழு உறுப்பினர்கள் செல்வராஜ் நாடார், பொன்பாண்டி நாடார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாக உறுப்பினர் ராஜ்குமார் நாடார் வரவேற்று பேசினார். தெட்சணமாற நாடார் சங்க திருநெல்வேலி செயலாளர் சண்முகவேல் நாடார் வாழ்த்தி பேசினார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக ராகுல்செவாலே எம்.பி., கவுன்சிலர் வசந்த் நகாசே ஆகியோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையை வழங்கினார்கள். இதில் மொத்தம் 420 பேருக்கு ரூ.9 லட்சத்து 26 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்பட்டது.

முடிவில் நிர்வாக உறுப்பினர் கோபால்ராஜா நாடார் நன்றி கூறினார். விழாவில் கலந்து கொண்ட மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

Next Story