விழுப்புரம் அருகே குண்டர் தடுப்பு சட்டத்தில் ரவுடி கைது
விழுப்புரம் அருகே ரவுடியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் அடுத்த வளவனுார் அருகே உள்ள வி.புதூர்கிராமத்தை சேர்ந்தவர் மகேஷ்(எ)மகேஷ்வரன் (வயது 38). ரவுடியான இவர் மீது வளவனுார் பகுதிகளில் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், அடி, தடி தகராறு, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
கடந்த சில வாரத்திற்கு முன்பு கொலை முயற்சி வழக்கு தொடர்பாக மகேஷ்வரனை போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, இவர் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் இவருடைய குற்றசெயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அவரை கைது செய்ய உத்தரவிடுமாறு மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் மகேஷ்வரனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.
இதையடுத்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மகேஷ்வரனை வளவனுார் போலீசார் கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல் கடலூர் மத்திய சிறை அலுவலர்கள் மூலம் அவருக்கு வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story