திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் கிராம மக்கள் முற்றுகை
திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் கிராமமக்கள் கோவில் திருவிழா நடத்த அனுமதி கேட்டு முற்றுகையிட்டனர்.
திருமங்கலம்,
திருமங்கலம் அருகே உள்ள காண்டை கிராமத்தில் உள்ளது கன்னிமாரியம்மன் கோவில். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற இந்த திருவிழாவில் இருதரப்பினருக்கு இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. அன்று முதல் இன்று வரை திருவிழா நடைபெறவில்லை.
தற்போது ஊர் முதன்மை நாட்டாண்மை ராமராஜ் தலைமையில் சாமி கும்பிட வேண்டும் என கோரிக்கை விடுத்து திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் கிராமமக்கள் முற்றுகையிட்டனர். அப்போது அவர்களிடம், தாசில்தார் நாகரத்தினம் திருமங்கலம் காவல் நிலையத்தில் திருவிழா நடத்துவது பற்றி பேச்சுவார்த்தை நடத்துமாறு அறிவுறுத்தினார்.
பேச்சுவார்த்தையை தொடர்ந்து திருமங்கலம் போலீஸ் துணைசூப்பிரண்டு ராமகிருஷ்ணனிடம் கிராமமக்கள் மனு கொடுத்தனர். அப்போது இனிமேல் தகராறு வராது எனக்கூறி அனைத்து கிராம மக்கள் சார்பாக அமைதி கூட்டம் நடத்தி பேச்சுவார்த்தை நடத்துமாறு போலீஸ் துணைசூப்பிரண்டு கேட்டுக்கொண்டார்.

Related Tags :
Next Story