பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்


பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
x

பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கும்பகோணம், 

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், விலையை உடனடியாக குறைக்க நடவடிக்கை எடுக்கக்கோரியும் தமிழ்நாடு வ.உ.சி. மக்கள் இயக்கம் சார்பில் கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு மக்கள் இயக்கத்தின் நிறுவன தலைவர் சிங்காரவேலுபிள்ளை தலைமை தாங்கினார். தலைமை நிலைய செயலாளர் கலியபெருமாள் முன்னிலை வகித்தார்.

பெட்ரோல், டீசல் விலை, பொது மற்றும் சரக்கு போக்குவரத்து கட்டணங்கள், அத்தியாவசிய பொருட்களின் விலை ஆகியவற்றை குறைக்க வேண்டும். விற்பனை வரியை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் மாநில செய்தி தொடர்பாளர் அசோக்குமார், மாவட்ட தலைவர்கள் செல்வராஜ், சுவாமிநாதன், மாவட்ட செயலாளர்கள் ரமேஷ், ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story