கர்நாடக மாநிலத்தில் பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ரூ.2 குறைப்பு இன்று முதல் அமல் முதல்-மந்திரி குமாரசாமி அறிவிப்பு
கர்நாடகத்தில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப் படும் என்றும், இந்த விலை குறைப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது என்றும் முதல்-மந்திரி குமாரசாமி அறிவித்துள்ளார்.
பெங்களூரு,
இந்தியாவில் பெட்ரோலிய பொருட்களின் விலை தினமும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் பெட்ரோலிய பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது. தற்போது பெட்ரோல்-டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் உள்ளது. இந்த விலை உயர்வால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பெட்ரோலிய பொருட்களின் விலையை கட்டுப் படுத்த கோரியும், விலை உயர்வை கண்டித்தும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இதற்கிடையே ராஜஸ்தான், ஆந்திராவில் மாநில அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் கர்நாடகத்தில் பெட்ரோல்-டீசல் விலை குறைக்கப்படுமா? என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் எதிர்பார்த்தனர்.
இந்த நிலையில் கர்நாடகத்தில் பெட்ரோல்-டீசல் விலை ரூ.2 குறைக்கப்படுவதாக முதல்-மந்திரி குமாரசாமி நேற்று அறிவித்தார்.
அதாவது முதல்-மந்திரி குமாரசாமி நேற்று கலபுரகி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கலபுரகி மாவட்டம் அப்சல்புராவில் உள்ள தத்தாத்ரேயா சுவாமி கோவிலில் அவர் சாமி தரிசனம் செய்தார்.
முன்னதாக முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது இந்த அறிவிப்பை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வதால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் கர்நாடக மக்களின் நலனை கருத்தில்கொண்டு பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க மாநில அரசு முடிவு செய்திருக்கிறது. பெட்ரோல், டீசலுக்கு மாநில அரசு சார்பில் விதிக்கப்படும் விற்பனை வரியை குறைக்க அரசு முன்வந்துள்ளது.
அந்த வரியை குறைப்பதன் மூலம் ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் ரூ.2 குறைக்கப்படும். இந்த விலை குறைப்பால் மாநில அரசுக்கு ஏற்படும் இழப்பை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்களின் நலனே முக்கியம் என்பதால் இந்த விலை குறைப்பு நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது.
இஸ்ரேல் நாட்டை போன்று கர்நாடகத்திலும் விவசாய முறையை நவீனப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. முதற்கட்டமாக இஸ்ரேல் விவசாய முறையை மேற்கொள்ள 8 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஐதராபாத்-கர்நாடகாவில் உள்ள யாதகிரி மற்றும் கொப்பல் மாவட்டங்களும் அடங்கும். கூட்டணி ஆட்சியில் மாநில வளர்ச்சிக்காக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஐதராபாத்-கர்நாடக மாவட்டங்களின் வளர்ச்சிக்காக கூட்டணி ஆட்சியில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இங்குள்ள மாவட்ட மக்களுடன் கலந்துபேசி, அவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். ஐதராபாத்-கர்நாடக பகுதிகளில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.
கலபுரகியில் விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த விமான நிலையத்தில் மற்ற வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படும். கலபுரகியில் விமான நிலையம் இருப்பதால் ஐதராபாத்-கர்நாடக பகுதிகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும். சுற்றுலா பயணிகளின் வருகை கூட அதிகரிக்க வாய்ப்புள்ளது.
ஐதராபாத்-கர்நாடக பகுதியில் வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டில் சில குறைபாடுகள் இருப்பது எனது கவனத்திற்கு வந்துள்ளது. அது சரி செய்யப்படும். இந்த பகுதிகளை சேர்ந்த 20 ஆயிரம் பேருக்கு அரசு வேலை கிடைத்துள்ளது. 2013-ம் ஆண்டில் இருந்து இதுவரை ஐதராபாத்-கர்நாடக பகுதிக்கு ரூ.2,880 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அவற்றில் ரூ.2,411 கோடி செலவு செய்யப்பட்டு இருக்கிறது. இவ்வாறு குமாரசாமி கூறினார்.
இந்த நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் மீதான ரூ.2 விலை குறைப்பு அமல்படுத்தப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
அதாவது கர்நாடகத்தில் பெட்ரோல் மீது 32 சதவீத விற்பனை வரியும், டீசல் மீது 21 சதவீத் விற்பனை வரியும் அரசு விதித்திருந்தது. அதில், பெட்ரோல் மீதான விற்பனை வரியை 3.25 சதவீதமும், டீசல் மீதான விற்பனை வரியை 3.27 சதவீதமும் குறைத்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டு இருக்கிறது.
ராஜஸ்தான், ஆந்திராவை தொடர்ந்து கர்நாடகத்திலும் பெட்ரோலிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதால் கர்நாடகத்தை சேர்ந்த வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Tags :
Next Story