ஸ்ரீரங்கத்தில் வெங்காய வெடி விற்கப்படுவதால் பொதுமக்கள் அச்சம் தடை விதிக்க கோரிக்கை


ஸ்ரீரங்கத்தில் வெங்காய வெடி விற்கப்படுவதால் பொதுமக்கள் அச்சம் தடை விதிக்க கோரிக்கை
x
தினத்தந்தி 18 Sep 2018 1:21 AM GMT (Updated: 18 Sep 2018 1:21 AM GMT)

ஸ்ரீரங்கம் பகுதியில் பாப்-பாப் என்ற பெயரில் வெங்காய வெடிகள் விற்பனை செய்யப்படுவதால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

ஸ்ரீரங்கம்,

தீபாவளி பண்டிகை மற்றும் கோவில் திருவிழாக்களின் போது பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன. இந்த பட்டாசுகள் அரசு அனுமதி பெற்ற நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. ஆனால், அனுமதி பெறாமல் தயாரிக்கப்படும் பட்டாசுகளால் அவ்வப்போது வெடி விபத்துகள் ஏற்பட்டு பலர் உயிரிழந்து வருகின்றனர். தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் ஆங்காங்கே சிறிய அளவிலான பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், தரையில் வீசி வெடிக்க செய்யப்படும் வெங்காய வெடி ஆபத்தானது என்பதால் அரசால் ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், இந்த வெங்காய வெடி ஆங்காங்கே ரகசியமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோடு பட்டாசு குடோனில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உடல் சிதறி இறந்தனர். போலீசார் விசாரணையின் போது, இந்த பட்டாசு குடோனில் வெங்காய வெடிகள் அதிக அளவில் இருந்ததும், அதனால் தான் இந்த விபத்து ஏற்பட்டதும் தெரியவந்தது.

இந்நிலையில் ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு, கீழவாசல் உள்பட பல்வேறு பகுதிகளில் தற்போது ‘பாப்-பாப்’ என்ற பெயரில் வெங்காய வெடி விற்கப்படு கிறது. அதை சிறுவர்கள் வாங்கி தரையில் வீசி வெடித்து வருகின்றனர். இதனால், அவர் களுக்கு ஏதாவது ஏற்பட்டு விடுமோ என்று பெற்றோர்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். இந்த வெடி விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story