தர்மபுரி மாவட்டத்தில் பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாட்டம், சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
தர்மபுரி மாவட்டத்தில் பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவரது சிலைக்கு பல்வேறு கட்சிகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தர்மபுரி,
பெரியாரின் பிறந்த நாள் விழா தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு கட்சிகள் சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தர்மபுரியில் உள்ள பெரியார் சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் விவசாய அணி மாநில தலைவர் டி.ஆர்.அன்பழகன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், நகர செயலாளர் குருநாதன், மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன், முன்னாள் எம்.எல்.ஏ.குப்புசாமி, அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பழனிசாமி, கூட்டுறவு சங்க தலைவர் கோவிந்தசாமி, ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிரகாசம், பெரியண்ணன், கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று தர்மபுரி மாவட்ட தி.மு.க. சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி தர்மபுரியில் உள்ள பெரியார் சிலைக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ. தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் தர்மச்செல்வன், நகர செயலாளர் தங்கராஜ், முன்னாள் எம்.பி. தாமரைச்செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ. மனோகரன், முன்னாள் நகர செயலாளர் சிட்டி முருகேசன், ஒன்றிய செயலாளர்கள் சேட்டு, சண்முகம் உள்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இதேபோல் அரூர் சுண்டாங்கிபட்டி பெரியார் நினைவு சமத்துவபுரம், மொரப்பூர், செங்குட்டை ஆகிய இடங்களில் நடந்த விழாவில் முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் கலந்து கொண்டு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் செங்கண்ணன், மாநில ஆதிதிராவிட நலக்குழு துணை செயலாளர் ராஜேந்திரன், முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் பொன்னுசாமி, செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
தர்மபுரி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் டி.கே.ராஜேந்திரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் தர்மபுரியில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர்கள் பூக்கடை முனுசாமி, நகர செயலாளர் மணிவண்ணன், நகர பேரவை செயலாளர் பெருமாள், நிர்வாகிகள் வேலாயுதம், குமரேசன், வெற்றிவேல், கோகுல் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
தர்மபுரி மாவட்ட தே.மு.தி.க. சார்பில் மாவட்ட செயலாளர் தம்பி ஜெய்சங்கர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் குமார், மாவட்ட துணை செயலாளர் மணிமுனியப்பன், நகர செயலாளர் அன்புவிஜய், ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, ராமச்சந்திரன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் தங்கவேல் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
தர்மபுரி மாவட்ட ம.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் தங்கராஜ் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் நகர செயலாளர் வஜ்ஜிரவேல், மாவட்டஇளைஞரணி செயலாளர் வீரமணி, முன்னாள் ஒன்றிய செயலாளர் ஆசை பாஷா, முத்தியாலு, நிர்வாகிகள் ஜெயப்பிரகாசம், சிவபாதம், ராமசாமி, குப்புசாமி, குமரவேல், வெங்கடேசன், ஆதிமூலம், பழனி, வெல்டிங் சின்னசாமி உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று தர்மபுரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் மாதன் தலைமையில் நிர்வாகிகள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் நிர்வாகிகள் ஜெயராமன், தமிழ்ச்செல்வன், கதிர், தகடூர் தமிழ்ச்செல்வி, பரமசிவம், கிருஷ்ணமூர்த்தி, பரிமளம், பிரபாகரன், சரவணன், வேட்ராயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தர்மபுரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் ஜெயந்தி தலைமையில் மாநில நிர்வாகி நந்தன், மாவட்ட பொருளாளர் மன்னன், மாவட்ட துணை செயலாளர் மின்னல்சக்தி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தேசிய மக்கள் கட்சி சார்பில் நிறுவனத்தலைவர் இனமுரசு கோபால் தலைமையில் நிர்வாகிகள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் மாநில தலைவர் மாறன் பெருமாள், ஆலோசகர் மாதன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பென்னாகரத்தில் தி.மு.க., தி.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு இன்பசேகரன் எம்.எல்.ஏ. தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஊர்வலமாக வந்து பஸ் நிலையத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. ஒன்றிய கழக செயலாளர்கள் செல்வராஜி, ஏரியூர் ஒன்றிய செயலாளர் என்.செல்வராஜ், நகர செயலாளர் வீரமணி, திராவிடர் கழக நிர்வாகிகள் தீர்த்தகிரி, தியாகராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட குழு உறுப்பினர் ஆறுமுகம், விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி கருப்பண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கடத்தூர் அருகே உள்ள தாளநத்தம் கிராமத்தில் தி.க. சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி பெரியார் உருவப்படத்திற்கு நிர்வாகிகள் பாண்டியன், பிரபாகரன், தமிழ்செல்வன் உள்ளிட்டவர்கள் மாலை அணவித்து மரியாதை செலுத்தினர். இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story