பிறந்த நாளையொட்டி பெரியார் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை


பிறந்த நாளையொட்டி பெரியார் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 18 Sept 2018 7:33 AM IST (Updated: 18 Sept 2018 7:33 AM IST)
t-max-icont-min-icon

பிறந்த நாளையொட்டி பெரியார் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அரியலூர், 

அரியலூரில் தி.க.வினர் சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அரியலூர் பஸ் நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு தி.க. பொதுக்குழு உறுப்பினர் தங்கவேல் தலைமையில் கட்சியினர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் நகர தலைவர் கோவிந்தராஜ், ஒன்றிய தலைவர் சிவக்கொழுந்து, செயலாளர் கோபாலகிருஷ்ணன், டாக்டர் வசந்தா மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஜெயங்கொண்டம் நகர தி.மு.க. சார்பில் பெரியார் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தி.மு.க.வினர் ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் இருந்து கடைவீதி வழியாக ஊர்வலமாக சென்று அண்ணா சிலையை வந்தடைந்தனர். பின்னர் அங்குள்ள பெரியார் சிலைக்கு நகர செயலாளர் கருணாநிதி தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதில் திராவிடர் கழக மண்டல தலைவர் காமராஜ், தலைமை கழக பேச்சாளர் குமார், கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தா.பழூர் ஒன்றிய தி.மு.க. சார்பில், தா.பழூர் பஸ் நிறுத்தத்திற்கு அருகே உள்ள பெரியார் சிலைக்கு (கிழக்கு) ஒன்றிய தி.மு.க சார்பில் ஒன்றிய கழக செயலாளர் க.சொ.க.கண்ணன் தலைமையில், கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தி.க. ஒன்றிய தலைவர் மகாலிங்கம், தி.க. ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், பொதுக்குழு உறுப்பினர் அண்ணாதுரை, மாவட்ட விவசாய தொழிலாளரணி அமைப்பாளர் ராமதுரை மற்றும் தி.மு.க., தி.க. கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

Next Story