‘தி.மு.க.வுடன் வைகோ கூட்டணி வைத்தது தற்கொலைக்கு சமமானது’ அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
‘தி.மு.க.வுடன் வைகோ கூட்டணி வைத்தது தற்கொலைக்கு சமமானது’ என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
கோவில்பட்டி,
‘தி.மு.க.வுடன் வைகோ கூட்டணி வைத்தது தற்கொலைக்கு சமமானது’ என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கோவில்பட்டியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மணிமண்டபம்
நடிகர் தியாகராஜ பாகவதருக்கு திருச்சியில் மணிமண்டபம் அமைப்பது குறித்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் நடைபெற உள்ள தமிழ் சினிமா நூற்றாண்டு விழாவில் அறிவிப்பார். விசுவகர்ம சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்கு முதன்முதலாக அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்பதற்காக, ராஜேந்திர பாலாஜிக்கு அமைச்சர் பதவி தந்து கவுரவித்தவர் மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா.
எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வை தொடங்கி மகத்தான சாதனைகளை புரிந்தார். ஆனால் வைகோ தி.மு.க.வில் இருந்து விலகி ம.தி.மு.க.வை தொடங்கினார். பின்னர் அவர் மறுபடியும் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளார். இது தற்கொலைக்கு சமமானது.
எச்.ராஜா மீது வழக்கு
புழல் சிறையில் கைதிகளுக்கு செய்யப்பட்ட அடிப்படை வசதிகள் பற்றி சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் விளக்கம் அளித்ததை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சரியாக புரிந்து கொள்ளவில்லை.ஆடு, மாடுகளை சந்தைகளில் விலைக்கு வாங்குவது போன்று, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களை டி.டி.வி.தினகரன் வாங்கி வைத்துள்ளார். அவர் முறைகேடாக டோக்கன் கொடுத்து வெற்றி பெற்றதால், அவரால் அவரது தொகுதிக்கு கூட தைரியமாக செல்ல முடியவில்லை.காவல் துறையையும், நீதிமன்றத்தையும் அவதூறாக பேசியதாக பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
Related Tags :
Next Story