நெல்லை, சேரன்மாதேவியில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
குட்கா ஊழல் தொடர்பாக தமிழக அரசை கண்டித்து நெல்லை, சேரன்மாதேவியில் தி.மு.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை,
குட்கா ஊழல் தொடர்பாக தமிழக அரசை கண்டித்து நெல்லை, சேரன்மாதேவியில் தி.மு.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
குட்கா ஊழல் தொடர்பாக தமிழக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. நெல்லையில் சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப், நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் ஆகியோர் தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசையும், அமைச்சர்களையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதில் எம்.எல்.ஏ.க்கள் மைதீன்கான், லட்சுமணன், முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமி பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சேரன்மாதேவி
இதேபோல் நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சேரன்மாதேவி பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமை தாங்கினார். பூங்கோதை ஆலடி அருணா எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க.வினர் திரளாக கலந்து கொண்டனர். அவர்கள் மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story