பணகுடியில் ரூ.56 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணி மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆய்வு


பணகுடியில் ரூ.56 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணி மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆய்வு
x
தினத்தந்தி 19 Sept 2018 2:30 AM IST (Updated: 18 Sept 2018 7:58 PM IST)
t-max-icont-min-icon

பணகுடியில் ரூ.56 கோடியில் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இந்த பணியை மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

பணகுடி, 

பணகுடியில் ரூ.56 கோடியில் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இந்த பணியை மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

மத்திய மந்திரி ஆய்வு 

நெல்லை மாவட்டம் பணகுடி அருகில் உள்ள 4 வழிச்சாலை அமைத்து 10 வருடங்கள் ஆகிறது. இந்த 4 வழிச்சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதுவரை 820 பேர் இறந்துள்ளனர். 425 காயம் அடைந்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த விபத்தில் 2 பேர் இறந்துள்ளனர். இதேபோல் இந்த இடத்தில் தொடர்ந்து விபத்துகள் நடந்து கொண்டே இருக்கிறது. விபத்தை தடுப்பதற்காக பணகுடியில் 4 வழிச்சாலையில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று அரசு முடிவு செய்து அதற்காக ரூ56 கோடியில் திட்டம் தயாரித்துள்ளது.

இந்தநிலையில் நேற்று மாலையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பணகுடிக்கு வந்தார். அங்கு அடிக்கடி விபத்து நடக்கின்ற இடத்தையும், மேம்பாலம் கட்டப்பட உள்ள இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அவருடன் இன்பதுரை எம்.எல்.ஏ., தேசிய நெடுஞ்சாலைத்துறை மண்டல மேலாளர் ஸ்ரீதர், திட்ட மேலாளர் சரவணன், பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் தமிழ்செல்வன், மண்டல தலைவர் அய்யப்பன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் அழகானந்தம், முன்னாள் நகரப்பஞ்சாயத்து தலைவர் லாரன்ஸ் உள்பட பலர் உடன் இருந்தனர்.

ரூ.56 கோடியில் மேம்பாலம் 


இதுகுறித்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், பணகுடி 4 வழிச்சாலையில் வடக்கு, தெற்கு பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. விபத்தை தடுக்க இந்த இடத்தில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பணகுடி பொதுமக்களும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்ததலைவர் நல்லக்கண்ணு, எம்.எல்.ஏ. இன்பதுரை உள்ளிட்ட பலரும் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று ரூ.56 கோடியில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த பணிக்கு இன்னும் 10 நாட்களில் டெண்டர் விடப்பட்டு 45 நாட்களில் பணிகள் தொடங்கப்படும் என்றார்.

இன்பதுரை எம்.எல்.ஏ. 

இன்பதுரை எம்.எல்.ஏ. கூறுகையில், பணகுடியில் விபத்தை தடுப்பதற்காக இங்கு மேம்பாலம் கட்டித்தரப்படும் என்று நான் தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்து இருந்தேன். இந்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக மத்திய மந்திரி நிதின் கட்காரியை புதுடெல்லியில் சந்தித்து, பணகுடி 4 வழிச்சாலையில் அடிக்கடி விபத்து நடக்கிறது. இதை தடுக்க அங்கு மேம்பாலம் கட்டவேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அதை ஏற்று அவரும் மேம்பாலம் அமைக்கப்படும் என்றார். இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனையும் தூத்துக்குடி விமான நிலையத்தில் சந்தித்து கோரிக்கை வைத்தேன். எனது கோரிக்கையை ஏற்று இங்கு அதிகாரிகளுடன் வந்து ஆய்வு செய்துள்ளார். இங்கு மேம்பாலம் அமைக்கும் பணி விரைவில் டெண்டர் விட்டு 18 மாதங்களுக்குள் முடிக்கப்படும் என்றார். 

Next Story