குட்கா ஊழலை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


குட்கா ஊழலை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Sep 2018 9:30 PM GMT (Updated: 18 Sep 2018 10:44 PM GMT)

குட்கா ஊழலை கண்டித்து தேனியில் தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தேனி,


தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட் களை விற்பனை செய்ய உயர் போலீஸ் அதிகாரிகள், அரசு ஊழியர்கள் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த குட்கா ஊழலை கண்டித்து தி.மு.க. சார்பில் மாநிலம் முழுவதும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதன்படி, தேனி மாவட்ட தி.மு.க. சார்பில் தேனி பங்களாமேட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கம்பம் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கி பேசினார். முன்னாள் டெல்லி சிறப்பு பிரதிநிதி கம்பம் செல்வேந்திரன், தி.மு.க. விவசாய தொழிலாளர் அணி மாநில தலைவர் எல்.மூக்கையா ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, குட்கா ஊழலில் லஞ்சம் வாங்கிய அதிகாரிகளை கைது செய்ய வலியுறுத்தியும், சுகாதாரத்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியும், தமிழக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. லட்சுமணன், தேனி நகர பொறுப்பாளர் முருகேசன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு கொண்டனர். 

Next Story