தலோஜா நதி மாசு விவகாரம் சிட்கோ அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு


தலோஜா நதி மாசு விவகாரம் சிட்கோ அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 19 Sept 2018 4:38 AM IST (Updated: 19 Sept 2018 4:38 AM IST)
t-max-icont-min-icon

நவிமும்பை தலோஜா பகுதியில் சிட்கோ கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை உள்ளது. இதில், இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் தலோஜா நதி மாசு அடைவதாக புகார்கள் வந்தன.

மும்பை,

மாநில மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் தலோஜா நதியின் தண்ணீா் மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பினர். அப்போது, கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் நதி மாசடைந்து இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் நதி மாசடைந்த விவகாரம் தொடர்பாக சிட்கோ நிர்வாக பொறியாளர் கிரிஷ் ரகுவன்சி, உதவி நிர்வாக பொறியாளர்கள் அகமது கான், அவினாஷ் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story